ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளையானது ஆய்வுகளுக்கும் பல சந்தேகங்களுக்கும் உரிய ஒரு பொருளாக இருந்து வருகின்றது. இவரது மூளையானது இவர் இறந்து ஏழு மணி நேரங்களுக்குப் பின்னர் அகற்றப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அதிகமான அறிவே இவ்வாய்வுகளுக்குக் காரணமாகும்.
ஐன்ஸ்டீனின் மூளையில் எண், வெளி சார்ந்த பகுதிகள் பெரியதாகவும், பேச்சு, மொழி சார்ந்த பகுதிகள் சிறியதாகவும் உள்ளன. 1955ல் ஐன்ஸ்டைன் இறந்த பின் அவரது உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு மூளை மட்டும் தனியாக எடுக்கப்பட்டது.
இந்த மூளையைப் பற்றி அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. பின்னர் தாமஸ் ஸ்டோல்ட்ஸ் ஹார்வி என்பவர் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் வைத்து மீண்டும் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
தற்போது இம்மூளை அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியா எனுமிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.