கணவன் மனைவி உறவு நட்பின் உச்சம் ஏன்?

By News Room

இல்லற வாழ்விற்கு தேவையான சில அடிப்படை தகுதிகள்: 1) இரண்டு வெவ்வேறு குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவர்கள், இணைந்து ஏற்படுத்தும் மிக முக்கியமான சமூக கட்டமைப்பு, குடும்பம்.

2) மனபொருத்தம் அமையாவிட்டால், எத்தனை பொருத்தங்கள் பார்த்தும் பிரயோசனமில்லை.

3) வேறு வழியில்லை என்பதாலோ, விருப்பத்தை மீறியோ, கட்டாயப் படுத்தி, நிர்பந்தத்தால் நடக்கும் திருமணம் வெறும் சடங்கு மட்டுமே.

4) கணவன் மனைவி உறவு என்பது நட்பின் உச்சம் மட்டுமல்ல தியாகத்தின் உச்சமும் கூட.

5) உங்கள் வாழ்கையில் ஒரு பகுதியை வாழ்கை துணைக்கு ஒதுக்க முடியாவிட்டால், அல்லது நீங்கள் அதற்கு தயாராக இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

6) பணம், பொருள், சுகபோக வாழ்கை என்பதை மட்டும் எதிர்பார்த்து நடக்கும் திருமணம் கடைசியில் சங்கடத்தில் தான் கொண்டு சென்று நிறுத்தும்.

7) குடும்பம் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின், தனிப்பட்ட சுக துக்கம் என்பதை, தேவைகளை தானாக குறைத்துக் கொள்ள தெரிந்து இருக்க வேண்டியது அவசியம்.

உங்களது தனிப்பட்ட சுகங்களை, நட்புகளை, உறவுகளை, வாழ்கை துணையால், ஏற்றுக்கொள்ளும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

9) அவ்வாறு இல்லாத சுகங்களை, பழக்கங்களை, நட்புகளை, உறவுகளை நீங்கள் விட்டு கொடுக்க தேவையான மன உறுதி இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.

10) எந்த நிலையிலும், சூழ்நிலையிலும் வாழ்கை துணையை விட்டுக்கொடுக்க, தரம்தாழ்த்த, அனுமதிக்கவே கூடாது. எனக்கு எனது வாழ்கை துணை எப்போதும் துணை நிற்க்கும், போராடும், என்ற நம்பிக்கை தான் குடும்பத்தின் ஆணிவேர்.

11) எக்காரணம் கொண்டும் சந்தேகம் என்ற அரக்கனை மட்டும் குடும்ப உறவுக்குள் அனுமதிக்கவே கூடாது. “சந்தேகம்” என்ற இந்த நோய், மிக பெரிய குடும்ப கொலையாளி.

12) தவறு செய்வது மனித இயல்பு. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தவறை கண்டிக்கும் உரிமையும் வாழ்கை துணைக்கு உண்டு.

13) குடும்பத்தின் நலன் கருதி, வாழ்கை துணை எடுத்து சொல்லும் யோசனைகளை, புறம்தள்ளாதீர்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்றோ, உனக்கு என்ன தெரியும் என்றோ, அகம்பாவம் வேண்டாம்.

14) தயவு செய்து உங்கள் குடும்ப பிரச்சனைகளை, யாரிடமும், எக்காரணம் கொண்டும் விளம்பர படுத்தாதீர்கள்.

உங்களுக்குள் பேசி தீர்க்க முடியாத பிரச்சனை என்றால், தகுதியான, பக்குவம் நிறைந்த குடும்ப பெரியவர்கள் அல்லது இதற்காகவே தகுதி பெற்ற நபர்களிடத்தில் மட்டுமே அறிவுறை கேட்க வேண்டும்.

15) புற அழகு மயக்கம், வெளி வேஷ மோகம், நானா அல்லது நீயா என்கிற போட்டி, சதி, சுயநலம், சுய கௌரவம் எல்லாம் வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட தெரிந்து இருக்க வேண்டும்.

16) உங்களை எப்படி உங்கள் வாழ்கை துணை நடத்த வேண்டும் என சொல்லி கொடுப்பதை விட நீங்கள் அதுபோல் வாழ்ந்து காட்டி உதாரணமாக இருந்து கற்றுக்கொடுங்கள்.

17) உங்கள் பெற்றோர்களையும், உடன்பிறந்தோரையும் உங்கள் வாழ்கை துணை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும், அதே போல் அவர்களது குடும்ப உறவுகளை நீங்களும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நடிப்பிற்கும், கள்ளத்தனத்திற்கும், நாடகத்திற்கும் குடும்பத்தில் இடமில்லை.

வாழ்கையில், குடும்ப பாரத்தை ஏற்க இருப்பவர்களும், ஏற்கனவே அதில் உழன்று கொண்டிருப்பவர்களும் என அனைவரும் இந்த பொறுப்புக்களை உணர்ந்து உண்மையாக, உறுதியாக, நிலையாக இருக்க தெரிந்தால், குடும்பத்தில் அமைதியும், இன்பமும், வருங்கால சந்ததியினருக்கு தேவையான அடிஸ்தானமும், அமைத்திட முடியும் என்பது உறுதி.

.
மேலும்