கணவன் மனைவி இடையே ஏன் சந்தேக பிரச்னை?

By saravanan

பொதுவாக திருமணம் முடிந்த தம்பதிகள் தங்களின் வாழ்க்கையை இன்பத்துடன் துவங்குவதற்கும்., வளமாக மாற்றுவதற்கும் ஏற்றுக்கொள்ளும் ஓர் நிகழ்வாகும். இன்றுள்ள காலகட்டத்தில் பல தம்பதிகள் கடமைக்கு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சரியான புரிதல்கள் இல்லாமல் வாழ துவங்கும் தம்பதிகள்., தாம்பத்திய வாழ்க்கையில் ஏமாற்றம் அடைவதன் காரணமாக மற்றொரு துணையை தேடி செல்கின்றனர்.

திருமணம் முடிந்த தருணத்தில் இருக்கும் நெருக்கத்தில் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் ஏதும் ஏற்படுவதில்லை. பின்னர் இருவருக்கும் இடையே ஏற்படும் சில சில பிரச்சனைகள் பெரிதாகி., இடைவெளியை அதிகரிக்கிறது. இந்த பிரச்சனையெல்லாம் தாம்பத்தியம் மறுக்கப்படும் சமயத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது. இதனால் குடும்பத்தில் விரிசல்., தேவையற்ற சண்டை மற்றும் சச்சரவு ஏற்பட்டு மனைவியின் மீதான ஈர்ப்பை குறைத்து., பிற துணையின் மீதான ஈர்ப்பை வெகுவாக அதிகரிக்கிறது.

கலவியை பொறுத்த வரையில் இருவருக்கும் இடையே வெளிப்படையான பேச்சுக்கள் கட்டாயம் இருக்க வேண்டும். பெரும்பாலான ஆண்கள் கலவியை பற்றி பேசுவதற்கு வெட்கம் ஏதும் கொள்ளுவதில்லை., இந்த விஷயத்தை பொறுத்த வரையில் பெண்கள் தங்களின் கணவரிடமும் பேசுவதற்கு சில தயக்கத்தை நினைத்து சந்தேகித்து., இது குறித்து கணவரிடம் கேட்டால் ஏதும் நினைப்பாரோ? என்று எண்ணுகின்றனர். சரி மனைவிதான் வெட்கம் கொள்கிறாள்., நாமாவது பேசுவோம் என்று எண்ணினால் கணவர் பேசும் சமயத்தில் அவரை விட்டு விலகி செல்கின்றனர்.

கலவி என்பது உணர்ச்சியை மட்டும் அடிப்படையாக கொண்டது இல்லை., இது அன்பின் வெளிப்பாடாகவும் அமைகிறது. இதனை பற்றி உங்களின் கணவரிடம் பேசுவதற்கு தயக்கம் தேவையில்லை. பெண்கள் தங்களின் கணவருடன் வெளிப்படையாக பேசும் சமயத்திலேயே பிரச்சனைக்கான தீர்வுகள் கிடைக்கும். இதன் மூலமாக இருவருக்கும் இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். பெரும்பாலான பெண்கள் குழந்தையை பெற்றெடுத்தவுடன் தனது இயல்பான உடல் எடையில் இருந்து மாற்றமடைவதால்., ஆண்களுக்கு சில சிந்தனைகள் எழுகிறது.

அந்த சிந்தனைகள்., குண்டான பெண்களுக்கு கலவியில் ஆர்வம் இருக்காது போன்றவை கூறப்படுகிறது. இது கணவனின் பார்வையை பொறுத்தே அமைகிறது.

ஆண்களை பொறுத்த வரையில் பெண்கள் அவர்களுக்கு பிடித்த உடலை கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணினால் அது நிறைவேறாத காரணம்.. ஏனெனில் பெண்கள் அறுவை சிகிச்சையை செய்யும் சமயத்தில்., சில நேரத்தில் உடலளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தையை பெற்றெடுத்த பின்னர் பெண்களுக்கு பணிகள் அதிகரிக்கிறது. இதனால் கணவர் விரும்பினாலும்., அவர்களுக்கு நேரம் மற்றும் உடல் நிலை சரியாக ஒத்துழைப்பதில்லை. என்னதான் இருந்தாலும் இருவருரிடமும் மனக்கட்டுப்பாடு இருத்தல் மற்றும் சந்தேக பிரச்சனை இல்லை என்றால் எந்த விதமான பிரச்சனை இருக்காது.

.
மேலும்