கல்யாணம் ஆன புதுசுல

By News Room

கல்யாணம் ஆன புதுசுல உங்க கணவர் சமயம் கிடைக்கும்போதெல்லாம் உங்களை.. கட்டி அணைத்திருப்பார்.. முத்தம் கொடுத்திருப்பார்.. சமையலறைக்கு அடிக்கடி ஓடி வந்திருப்பார்..

உங்கள் பிறந்த நாளுக்கு நள்ளிரவில் வாழ்த்தியிருப்பார்..சிறப்பு பரிசுகள் கொடுத்திருப்பார்..

ஆனால்.. வருடங்கள் கூடக்கூட இதெல்லாம், குறைந்திருக்கும்..சமயங்களில் அறவே நின்றுகூட போயிருக்கும்.

இதுதான் எதார்த்தம்..

ஆனால் நீங்கள்,ஆரம்பகால விசயங்களோடு ஒப்பிட்டு, ஒப்பிட்டு அவரை குடைய தொடங்குவீர்கள்.

உங்கள் கோபம் எரிச்சலாக வெளிப்படும்.இந்த எரிச்சல் மேலும் மேலும் உங்களிடமிருந்து அவரை விலக்குமே தவிர.. எந்த காலத்திலும் அந்த இன்ப நினைவுகளை மீண்டும் நிகழ்வில் கொண்டுவரவே வராது.

ஒரு குடும்பத்தலைவனின் மனசு என்பது இளங்மூங்கில் குருத்து போல..ஆரம்பகாலங்களில் நீங்க அந்த குருத்துக்கு சப்போர்ட்டாக நிற்பீர்கள் என்று அந்த குருத்து ஆனந்திக்கும்..

ஆனால்..

அவர் சகோதரர்களுடன் முரண்பாடு.. அவர் சகோதரிகளுடன் முரண்பாடு.. அப்பா-அம்மாவுடன் முரண்பாடு பொருளாதார தேவைகள்.. என தொடர்ச்சியாக நீங்கள் ஒவ்வொரு கல்லாக கட்டி அந்த குருத்தில் கட்டும்போது.. அந்த குருத்து வளைந்து தரையை தொட்டிருக்கும்.

உங்களையும் விட்டுக்கொடுக்க முடியாமல் உடன்பிறந்த,பெற்றோர்களையும் விட்டுக்கொடுக்கமுடியாமல் பொருளாதார தேவைகளையும் சமாளிக்கவும் திண்டாடி தன் சுயம் இழந்திருப்பார் அவர்.

இந்த சுய இழப்பு என்பது, இதெற்க்கெல்லாம் காரணம் என அவர் நினைக்கும் உங்கள் மீது எரிச்சலாய் திரும்பும்..

நீங்களும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல அவர் உங்களிடம் பேசும் இரண்டொரு நிமிடங்களில் கூட குறைகளையும் பிரச்னைகளை மட்டுமே பேசுவீர்கள்..

மாறாக..

கிடைக்கும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் உங்கள் பழைய ஆனந்த வாழ்வை மட்டும் நினைவுகூர்ந்து பேசுங்கள்.

உங்களோடு அவர் பேச தொடங்குவார்.. பிறகு உங்கள் எதிர்பார்ப்புகளை ஆசைகளை நயமாக வெளிப்படுத்திடுங்கள்.. ஏதாவது பணப்பிரச்னை என்றால் அதை பிரமாண்டமாய் விவரிக்காமல் மிகச்சாதாரண விசயமாய் சொல்லுங்கள்.

கவலைப்படாதீங்க..சமாளிப்போம் என்று பன்மையில்..நானும் உங்களுடன் இருக்கிறேன் என்று உணர்த்துங்கள். அவ்வளவுதான்..

உங்கள் திருமணமான புதிதில் இருந்த வசந்தம் மீட்டெடுக்கப்படும்!

.
மேலும்