ஆண்கள் பெண்கள் எந்த வயசுல கல்யாணம்?

By News Room

இப்போதெல்லாம் ஆண்கள் நான்கைந்து வயது மூத்த பெண்ணைக் கூடத் திருமணம் செய்து கொள்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு 29 வயது ஆண், திருமணமாகி விவாகரத்து பெற்று வாழும் 37 வயது பெண்ணை மணந்து கொண்டார். அந்தப் பெண்ணுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.. கடந்த மூன்று வருடங்களாக எவ்வித சச்சரவும் இன்றி அமைதியாகப் போகிறது அவர்களின் வாழ்க்கை.

இந்த ஆண் தன் விருப்பத்தை அந்தப் பெண்ணிடம் கூறும் போது அவர் ஒரே ஒரு கண்டிஷன் தான் போட்டார். "நான் உனக்கு உண்மையான மனைவியாக இருப்பேன்.. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் இன்னொரு பிள்ளை நான் பெற்றுக் கொள்ள மாட்டேன்.." என்று உறுதியாகக் கூறி அதற்கு அந்த ஆண் சம்மதித்த பிறகே திருமணம் செய்து கொண்டார்.

என் உறவினர் மகனுக்கு 37 வயதாகியும் திருமணத்திற்குப் பெண் கிடைக்காததால், கடைசியில் இரண்டு வயது மூத்த பெண்ணை (பெண்ணுக்கு 39 வயது) திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களும் எவ்வித குறையுமில்லாமல் தான் வாழ்கிறார்கள்.

ஒரு ஆண் தெளிவான சிந்தனையும் சமூக அழுத்தத்தை எதிர்கொள்ளும் மனோதிடமும் இருந்தால், 20 வயது மூத்த பெண்ணைக் கூடத் திருமணம் செய்யலாம்.. என்ன ஒன்று, உடலுறவு சார்நத விஷயங்கள் எதிர்பார்க்கும் அளவிற்குத் திருப்திகரமாக இருக்காது.. ஆனால் வயதில் மூத்த பெண்களின் முதிர்ச்சியான அன்பும் தோழமையும் ஒரு சுகம்.. அது சுலபமாக உடலுறவு சார்ந்த வேட்கையைச் சரி கட்டி விடுவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

இப்போது திருமணம் செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் குழந்தையைத் தவிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். எதிர்காலத்தில் கட்டாயம் ஆண் பெண் வயது விகிதம் அதிகமாகத் தான் இருக்கும்.. இன்னும் ஆண் மற்றும் பெண் ரோபோக்கள் (அதாவது Humanoids) 2040-ற்கு முன்பே ஆண்ட்ராய்டு போனை போலச் சகஜமாக விற்பனைக்கு வந்து விடும் என்கிறார்கள். அப்படி வந்து விட்டால், ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, மேட்ரிமோனியில் ஆண்/பெண் தேடுவது, திருமண மண்டபம் எல்லாம் வழக்கொழிந்து போய் விடும்..

நன்றி ஆபுத்திரன்.

.
மேலும்