நினைவுகள்: பிரிமனை அப்டின்னா?

By News Room

ஒரு காலத்தில் அதிகமாக புழங்கும் வார்த்தை "பிரிமனை" இப்போது காலப்போக்கில் வழக்கொழிந்து போய்விட்டது. அப்போதல்லாம் எல்லோர் வீட்டிலும் விறகு அடுப்புதான்.

சமைத்த சோற்று பானை, குழம்பு சட்டியைத் தரையில் இறக்கி வைக்க மாட்டார்கள் ஏனென்றால் சட்டியில் இருக்கும் கரி தரையில் ஒட்டி அசிங்கமாகிவிடும்.

 பானை, சட்டி அசையாமல் இருக்கவும் இது பயன்படும். வட்ட வடிவத்தில் தேங்காய் நாரில் வேயப்பட்ட தாங்கு பொருளில் இறக்கி வைப்பார்கள். அதுதான் பிரிமனை.

 அப்படியே அடுப்புல கொதிக்கிற குழம்பை இறக்கி பிரிமனையில் வை என்பார்கள்.

நாம் பயன்படுத்தும் பொருட்கள் மாற மாற எத்தனையோ அழகான தமிழ் வார்த்தைகளையும், நினைவுகளையும் இழந்து கொண்டு இருக்கிறோம்.

நன்றி: தென்றல் ராஜ்

.
மேலும்