சிறுகதை : நன்றிக்கடன்

By News Room

அப்பா , இந்த முறை நம் ஊர்  கோயில் திருவிழாவுக்கு வெளி ஊரிலிருந்து  நிறைய பேர் வருவாளே பா , நம்ம ஹோட்டலில் தானே விரும்பி  சாப்பாடு  சாப்பிடுவா ? மளிகை எல்லாம் நிறைய வாங்கனும் . பண சிக்கல்ல இருக்கோம்.

அவ்வளவு பணத்துக்கு எங்கே போவோம் ? தெரியலை மா  மைதிலி... நானும் பணத்துக்கு யாரையை கேட்கிறதுனு யோசிக்கிறேன்.

பேசிக்கொண்டே இருக்கும் போது அவர்கள் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது .. கிருஷ்ணன் கண்ணையை .சுருக்கி வாசலையை பார்த்து  யார் என்று யோசிக்க ..

மைதிலி , அப்பா இவர்... காரிலிருந்து இறங்கி வந்தான் ராகவன் மாமா என்ன தெரியறதா என்று க்ருஷ்ண ஐயரை பார்த்து கேட்க புருவத்தை சுருக்கி பார்த்த அவருக்கு ஒன்றும் புடிபடலை தெரியலையே என்று சொல்ல மாமா நான், உங்கள் ஹோட்டலில் முன்பு சரக்கு மாஸ்டரா இருந்தாரே கணேச ஐயர் அவரோட பையன் ராகவன் டெல்லில வேலை பார்க்கிறேன்.

ஆமாம் கணேசைய்யர் என்னண்ட வேல பாத்தான். இப்போ அவன் எப்படி இருக்கான் அப்பா இப்போ இல்லை நாலுவருஷத்த்துக்கு முன்னாடி காலமாயிட்டார்.

அட பாவமே. என்றார் க்ருஷ்ணய்யர் நான் படிக்கறத்துக்காக நீங்கள் உதவி செய்தீர்கள் அப்போது. அதுனால நான் இப்போ நல்ல நிலைமையில இருக்கேன்

இந்த ஊர் திருவிழாவ பார்க்க வந்திருக்கேன் என்று அறிமுகபடுத்திக் கொண்டு நீங்கள் இந்த கடைய நடத்த கஷ்டபடுகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன் ஆட்சேபனை இல்லை என்றால் எனது இந்த சிறு தொகையை ஏற்றுக்கொண்டு இந்த திருவிழா நாள் வியாபாரத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்று சொன்னான். மைதிலி எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தாள்.

அப்போது கிருஷ்ணய்யர் மைதிலியை அறிமுகபடுத்தினார், மைதிலிக்கு மாப்பிள்ளை தேடிகொண்டிருப்பதையும் சொன்னார்.

ராகவன் கொடுத்த பணத்தை வாங்கிகொண்டு திருவிழா வியாபாரத்தை நல்லபடியாக நடத்தினர்.

திருவிழா முடித்து கிளம்பும் போது க்ருஷ்ண ஐயரிடம் உங்களுக்கு சம்மதமென்றால் மைதிலியை எனக்கு கட்டிவைக்க முடியுமா, எந்த செலவும் செய்ய வேண்டாம் என்று கேட்டான் ராகவன்.

கிருஷ்ண ஐயர் மைதிலியிடம் கேட்க அவளும் சம்மதிக்க நான் டெல்லிசென்று  அம்மாவிடம்  சொல்லி அம்மாவை கூட்டிக்கொண்டு வந்து சம்பிரதாயப்படி பெண்பார்பதாக சொல்லி கிளம்பினான்.

திருவிழாவில் தெய்வ கடாக்ஷம் கிடைத்ததால் மைதிலிக்கு திருமணம் ஏற்பாடாகியது.

அப்பா கணேச ஐயர்க்கு உதவி செய்து என்னை படிக்க வைத்தமைக்கு நன்றிக்கடன் செய்ய முடிந்த்ததை பெருமிதமாக எண்ணினான் ராகவன்.

சுபம்..

நன்றி:  மாயவரம் மூர்த்தி

.
மேலும்