அன்றொரு நாள்
பாதி சாமத்தில்
பஞ்சாயத்து
சொந்தத்தில்
மாப்பிள்ளை இருக்கு
சொரணைக் கெட்டு போச்சா?
சாதியா? சனமா?
யாரென்றே தெரியாத
யாரோ ஒருவனுக்கு
வாக்கப்பட போறியா?
வாய்க்கு வந்தபடி
சொந்தக்கார சனமெல்லாம்
சொல்லி சொல்லி வஞ்சாங்க
கோவத்துல அப்பாவும்
ஆத்திரத்தில் அண்ணனும்
அடி மேல அடி அடிக்க
அப்பாயி ஓடி வந்து
அவளும் சேர்ந்தடிக்க
அப்பாயி அப்பாயி
அடிச்சே வேணுன்னாலும்
கொன்னு கூட போட்டுடுங்க
என்னப்பண்ண நினைச்சாலும்
என்ன வேணா பண்ணிக்கங்க
எவனுக்கு வேணுன்னாலும்
என்ன நீங்க கட்டிவைங்க
புள்ளை கூட பெத்துத்தாறேன்
ஆனா ஒண்ணு அப்பாயி
என்னைக்காச்சும் ஒரு நாளு
என்ன காதலிச்ச திருச்சி பய
என்ன தேடி வந்துபுட்டா
எல்லாத்தையும் விட்டுப்புட்டு
அவன் கூட போய்டுவேன்
என்று சொன்ன பிறகே தான்
என்ன அடிக்கறத நிப்பாட்டி
என் கல்யாணத்த முடிச்சாங்க
இது கவி செல்வாவின் காதலதிகாரம்
கவி செல்வ ராணி திருச்சி