தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும், மற்ற நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகள், ஆக்சிஜன் விநியோகம், கொரோனா தடுப்பூசி கொள்முதல், கொரோனா பாதிப்பு, ரெம்டெசிவிர் மருந்து விற்பனை உள்ளிட்டவை குறித்து அவ்வப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற வசதியாக, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் எத்தனை காலியாக இருக்கிறது; தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகள் எத்தனை காலியாக இருக்கிறது; ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைகள் எத்தனை காலியாக இருக்கிறது; வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் எத்தனை காலியாக இருக்கிறது என்பதை இணைய தளம் மூலம் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன்படி, https://stopcorona.tn.gov.in/