7-வது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றி பிரதமர் மோடி பேசியதாவது:-
ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் போகவில்லை. பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. உலகளவில்இந்தியாவில் இறப்பு விகிதம் மிக குறைவு.
90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் கரோனா குறித்த அச்சம் தேவையில்லை.
நாடு முழுவதும் 2000 ஆய்வுகளும், சிகிச்சைக்கு மையங்களும் பரிசோதனைக்கு உள்ளன.
மக்கள் அலட்சியம் காட்டாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் கொரோனா குறைந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.
கொரோனா வைரஸ் நம்மை விட்டு முழுமையாக போகவில்லை என்பதை மக்கள் நன்றாக உணர வேண்டும்.
அமெரிக்கா, பிரேசில் நாட்டில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.
இந்தியாவில் அதிகமான பரிசோதனைதான் இந்த போரின் முக்கியமாக ஆயுதமாகும். ஆகவே விழிப்புடன் இருக்க வேண்டும். அலட்சியமாக இருப்பவர்கள் பாதிப்பதோடு மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்பு குறைவதாக நினைத்துக்கொண்டு முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக நடந்து கொள்ள வேண்டும்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். தசரா, தீபாவளி, ஈத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருவதால் பொது மக்கள் பாதுகாப்புடன் கொண்டாட வாழ்த்துக்கள் என்றார்.