இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் தெர்மோமீட்டர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர் உள்ளிட்ட மருத்துவக் கருவிகளை வாங்கி வைத்து, தினந்தோறும் தங்களது உடலின் வெப்ப நிலை மற்றும் ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவைகளைக் கண்காணித்து வருகின்றனர்.
பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்தும் முறைக் குறித்து பார்ப்போம்!
10 நிமிடங்கள் நிதானமாக அமர்ந்தப் பின் உங்கள் ஆக்சிஜன் (O2)அளவை சரிப் பார்க்கவும்.
கருவியைப் பயன்படுத்துவதற்கு முன் விரல்களைக் கிருமிநாசினியால் நன்றாக சுத்தம் செய்யவும்.
ஆள்காட்டி விரல் அல்லது நடுவிரலில் கருவியைப் பொருத்தவும்.
கருவியில் தெரியும் ஆக்சிஜன் அளவும், நாடி துடிப்பும் சீராக தெரியும் வரைக் காத்திருக்கவும்.
சில வினாடிகளுக்கு பிறகு ஆக்சிஜன் அளவையும், நாடி துடிப்பையும் குறித்துக் கொள்ளவும்.
விரல்களில் மருதாணி, நகப்பூச்சு, ஈரம் மற்றும் குளுமை ஆக்சிஜன் அளவை தவறாகக் காட்டக் கூடும்.
ஆக்சிஜன் அளவு 94% கீழ் இருந்தால் மற்ற கையில் உள்ள விரல்களில் பார்க்கவும்.
தொடர்ந்து 94% கீழ் இருந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும்.