ஓய்வு பெறுவதாக அறிவித்த சானியா மிர்சா. இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சானியா, 14-வது ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.
19 வருடங்களாக விளையாடி வரும் சானியா மிர்சா டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.