உத்திரபிரதேசம் லக்னோவில் சையது மோடி சர்வதேச 2022 பேட்மிண்டன் போட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சக வீராங்கனை மால்விகா பன்சோத்துடன் மோதினார்.
இந்தப் இறுதிப்போட்டியின் முதல் செட்டில் 21-13 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து வென்றார். 2வது செட்டிலும் சிந்து 21-16 என கைப்பற்றினார்.
இறுதியில் பி.வி.சிந்து 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.