முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து பேசினார்.
சென்னையில் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முதன்முறையாக தமிழ்நாட்டுக்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்து, முதல்வரானதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது. இது ஆறுதலைத் தருகிறது. இந்த நடவடிக்கைகளை எடுத்த தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளுக்கு எனது பாராட்டுக்கள். முதலமைச்சர் ஸ்டாலினிடம், புதுச்சேரி விமானநிலைய விரிவாக்கம் பற்றியும், கோதாவரி நதிநீர்த் திட்டம் குறித்தும் பேசினேன்.” இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.