Breaking News :

Thursday, January 02
.

வியாதிகள் வரமா அல்லது சாபமா ?!!


உடலை நேசிப்பவருக்கு வியாதி ஒரு சாபமே !!

ஏனெனில்,முதலில் நாக்கைக் கட்டுப்படுத்தவேண்டும் !
பிறகு ஆசையை அடக்கவேண்டும் ! 
இவையிரண்டும் உடல் மேல் ஆசை உள்ளவரை மிகவும் கஷ்டமான காரியம் !

ஆனால் பகவானையும்,பக்தியையும் நேசிப்பவருக்கு
வியாதி ஒரு ஆசிர்வாதமே !

● ஸ்ரீ நாராயண பட்டத்திரிக்கு
பக்கவாதம் என்னும் வியாதியே
அவரை நாராயணீயம் எழுத வைத்தது !

● வாசுதேவ கோஷுக்கு அவரின் தொழு நோயே 
அவருக்கு ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரின்
தரிசனத்தை பெற்றுத் தந்தது !

● ஸ்ரீ நாராயண தீர்த்தருக்கு அவரின்
வயிற்று வலியே வராஹ தரிசனத்தையும்,
க்ருஷ்ண லீலா தரங்கிணியையும் தந்தது !

● ஸ்ரீ சனாதன கோஸ்வாமிக்கு அவரின்
உடல் புண்களே அவருக்கு ஸ்ரீ சைதன்யரின்
பரிபூரண ப்ரேமையைக் கொடுத்தது !

● பீஷ்ம பிதாமகருக்கு அவரின் உடலில்
தைத்த அம்புகளின் வலியே அவரை
சஹஸ்ர நாமத்தை சொல்ல வைத்தது !

● மாரனேரி நம்பிக்கு ராஜ பிளவை நோயே
அவருக்கு ஆளவந்தாரின் அனுக்ரஹத்தையும்
மோக்ஷத்தையும் சாபல்யமாக்கியது !

இப்படி பல மஹாத்மாக்களின் வாழ்வில் வியாதிகளே மிகப்பெரிய மாற்றத்தையும், பக்குவத்தையும்
கொண்டுவந்திருக்கிறது . . .

புண்ணிய நதிகளான கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள் கூட , மக்கள் நீராடியதால் அவர்களின் பாவக்கறை தங்கள் மீது படிந்துள்ளதைப் போக்க சிவபெருமானின் அருளாசிப்படி துலா மாதத்தில் - ஐப்பசி மாதத்தில் - காவிரியில் நீராடி தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டன என புராணங்கள் கூறுகின்றன. அப்படியானால் மஹாத்மாக்களும் கூட தங்களை புனிதப் படுத்திக் கொண்டிருக்கலாம்.

அதற்காக நீங்கள் வியாதிகளை வரவேற்க வேண்டாம் !
ஆனால் வியாதிகளில் துவண்டு போகாமலிருக்க வேண்டும் !

நீங்கள் வியாதியால் வாடும் வெறும் உடலல்ல !
நீங்கள் வியாதியே இல்லாத சுத்தமான ஆத்மா★ !

வியாதிகள் உங்கள் வாழ்வை தீர்மானிப்பதில்லை !
பக்தியே உங்கள் வாழ்வை நிர்ணயிக்கிறது !

உடலை கவனித்துக் கொள்ளுங்கள் 
வியாதி வராமல் காத்துக்கொள்ளுங்கள் !
வியாதி வந்தால் சரி செய்து கொள்ளுங்கள் !

வியாதிக்காக மனமுடைந்து போகாதீர்கள் !
வியாதியில் வாழ்வை வெறுக்காதீர்கள்!
வியாதியை வெல்ல முயற்சி செய்யுங்கள் !

வியாதியில்லாமல் நீங்கள் வாழ
என்றும் பகவானின் ஆசீர்வாதங்கள் உண்டு. . . .!
..

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.