இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர்.
பிறப்பு: மார்ச் 6, 1960
இவர் பிறந்து வளர்ந்த ஊர் கோவில்பட்டி. அங்கே இருக்கும் GVN கல்லூரியில் ரசாயனத்தில் பட்டப் படிப்பு படித்தவர்.
சார்லி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
."தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு - 1937 முதல் 1967" என்ற தலைப்பில் .lஎம்.ஃபிலுக்கான ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார்.
சார்லி அக்டோபர் 2019 இல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் "தமிழ் சினிமாவில் நகைச்சுவை" என்ற தலைப்பில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றார்.
அவரது கல்லூரி நாட்களில், அவர் சிவாஜி கணேசன், முத்துராமன் மற்றும் நாகேஷ் போன்ற தமிழ் நடிகர்களைப் போல் நகல் செய்து அவரது அசாத்திய திறமைக்காக அறியப்பட்டார்.
திரைப்பட உலகில் சார்லலி என்று அழைக்கப் படுகிறார். ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக அவருக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.
நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் 800க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மோனோ ஆக்டிங், மேடை நிகழ்ச்சிகளில் ஆங்கரிங் செய்தல் போன்றவற்றில் மிகவும் திறமையான இவர், பல்வேறு நாடுகளில் தன் கலையை திறம்பட காட்டியுள்ளார்.
இவருடைய அபார நடிப்பு திறமைக்காக 2004ல் கலைமாமணி விருது, 2018lல் கலைசிகரம் விருது, மற்றும் பல திரைப்பட விருதுகளை வாங்கியுள்ளார்.
நான் சமீபத்தில் இவர் நடித்த எறும்பு என்ற படத்தை அமேசான் பிரைம் சேனலில் கண்டேன். ஒரு எளிய குடும்பத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட திரைப்படம். ஒருமுறை அவசியம் குடும்பத்துடன் காண்பதற்கு ஏற்ற படம்.