முதல் ஒரு இருபது நிமிடங்கள் படம் நமது பொறுமையை சோதிக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. அதன் பிறகு இடைவேளை முடியும் வரை... கதை மெதுவாக செல்கிறது. இலக்கை அடையாமல் கதை அலைமோதுகிறது. இடை வேளையில் உடன் வந்த எனது நண்பர்கள் சொன்னது "ஒளிப்பதிவு, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அருமை. படத்தில் எதுவுமே இல்லை" என்பது தான். எனது கருத்து கூட கிட்டதட்ட இடைவேளையின் போது அதுவாக தான் இருந்தது.
இடைவேளை முடிந்ததற்கு பிறகு... படம் ஜெட் வேகம். சூர்யாவின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
ஒரு இடத்தில் கூட கிராபிக்ஸ் காட்சி எது... உண்மையான காட்சி எது என்ற யோசனையே வராத அளவுக்கு தத்ரூபமாக இருந்தன காட்சிகள். வெற்றி அவர்களின் ஒளிப்பதிவு உலகத்தரம். மிதந்து செல்லும் மேகங்கள், அருவிகள், ஆறுகள், யானை கூட்டங்கள், மலைகள் என இயற்கை அழகை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளார் வெற்றி. ஒரு காட்சியில், சாலையில் கேமரா வேகமாக செல்வது போல... ஆற்றுக்குள் வேகமாக சென்று காட்சியை படமாக்கிய விதம் அற்புதம்.
நான் 3 Dயில் எத்தனையோ ஆங்கில படங்களை பார்த்து இருக்கிறேன். அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு தரமான 3D காட்சிகள் "கங்குவா" வில் பிரமிக்க வைக்கின்றன. மேகங்கள் தவழ்ந்து செல்லும் காட்சிகளில் உன்மையிலேயே மேகங்கள் திரையரங்கிற்குள் வந்துவிட்டனவோ என்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
அதே போல கல் நம் வீசப்படுவது போன்ற காட்சிகளில் , கல் நம்மை தாக்கிவிடுமோ என்று ரசிகர்கள் தலையை வேறு பக்கம் திருப்புவதை கவனிக்க முடிந்தது. அதே போல கல் கேமராவுக்கு பின்னால் இருந்து வீசப்படும் போது, நம்மை கடந்து கல் திரையை நோக்கி செல்வது போல பிரமிப்பு உருவாகிறது. அருவி, ஆற்று தண்ணீர் சிதறும் காட்சிகளில் தண்ணீர் நம்மை நனைப்பது போல சிலிர்க்கிறது.
முதல் பாதி சொதப்பலாக தெரிந்தாலும், இரண்டாம் பாதி உண்மையிலேயே அசத்தல் தான். படத்தின் இன்னொரு சிறப்பு. அது உலகின் எந்த மொழிக்கும் பொருத்தமாக இருக்கும் என்பது தான்.
சிறுவன்-சூர்யா சம்மந்தப்பட்ட காட்சிகளின் உணர்வுகள் இன்னும் கொஞ்சம் நம்மை பாதிப்பது போல் செய்து, வசணங்களை கூர்மையாக்கி, முன்பாதி இழுவையை சரி செய்து இருந்தால் படத்தை யாருமே குறை சொல்லி இருக்க வாய்ப்பே இருந்திருக்காது.
ஆனாலும், குறைகளை தாண்டி படக்குழுவினரின் உழைப்பும், இரண்டாம் பாதியும், ஒளிப்பதிவும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளும் என கலக்கி உள்ளது "கங்குவா".....!
SIVA and TEAM க்கு வாழ்த்துக்கள் தமிழ் சினிமாவை "கங்குவா" மூலம் உலக அரங்கில் கொண்டு சென்றதற்கு.
குறிப்பு: ஒளிப்பதிவாளர் வெற்றிக்கு ஒளிப்பதிவுக்கு என பல விருதுகள் காத்திருக்கின்றன.....