Breaking News :

Thursday, November 21
.

நடிகர் விஜயகாந்த் மறைவு: உதிர்ந்த துருவ நட்சத்திரம்


உடன் பிறந்தவர்கள் நிறைய பேர்.

அனைவருக்குமே ராஜ் என்றுதான் முடியும்.

 

இவர் பேர் கூட விஜய ராஜ் தான்..

கோடம்பாக்கம் இவரை காந்த் ஆக மாற்றியது..

 

உடன் பிறவாத சகோதரர் ஒருவரும் இவருக்கு இருந்தார்

இப்ராஹிம் ராவுத்தர்..

 

சட்டம் ஒரு இருட்டறை படத்தை முதல் வாரத்திலேயே மூன்று முறை பார்த்தேன்.

ஓடியன் மணி திரை அரங்கில்..

என்னை போலவே இவரும் நல்ல கருப்பு.

ஆனால் அந்த சிரிப்பு!

 

கொள்ளை வெள்ளை!

 

அந்த வெள்ளை சிரிப்பும் தனிமையிலே ஒரு ராகம் உருவாகும் பாடல்!

 

இரண்டுமே எனக்கு பிடித்து போனது..

 

முதல் படத்தின் வெற்றியால் ஏராளமான படங்கள் குவிய, அவற்றில் 90% படங்கள் குப்பை..

 

பெரிய கதநாயகிகள் இவருடன் நடிக்கவே தயங்க, சிலுக்கு ஸ்மிதா இவருக்கு இணையானார் பல படங்களில்..

 

பார்வையின் மறுபக்கம் படத்தில் ஸ்ரீபிரியா இணையாக நடித்தார்..

எனக்கு அந்த படமும் பிடிந்திருந்தது..மெட்ராஸ் வாத்தியார், ஆட்டோ ராஜா, மதுரை சூரன், நீதி பிழைத்தது..

இப்படி பல தோல்வி படங்கள்!

 

அப்புறம் ஒரு இடைவெளி..

சற்று நீண்ட இடை வெளி..

வாங்க,ரஜினிக்கு வில்லனாக ஒரு படம் பண்ணுங்க என்றார்கள் சிலர்..ரொம்ப நைச்சியமாக..

விஜயகாந்த் புன்னகையோடு மறுத்து விட்டார்.

 

முதல் படத்தை கொடுத்த SA சந்திர சேகர் மீண்டும் சாட்சி படத்தில் வாய்ப்பு கொடுக்க, படம் வெற்றி...

அப்புறம் விஜயகாந்துக்கு இறங்குமுகமே இல்லை என்றானது..

 

பூந்தோட்ட காவல்கரன்!

மிக பெரிய வெற்றி..

இன்றைக்கு அவரது மரண செய்தியை முதலில் அறிவித்த News 18 தொலைகாட்சி பின்னணி இசையாக வைத்தது அந்த படத்தின் சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு பாடலின் Pathos version தான்.

 

ராம நாராயணன்!

இவரோடு இணைந்து எத்தனை படங்கள்!

கரி மேடு கருவாயன் உள் பட..

 

கலைபுலி தாணு! விஜயகாந்துக்கு நெருங்கிய 

இன்னொரு தயாரிப்பாளர்!

கூலிகாரன்!.

T. ராஜேந்தர் இசை..

படமும் ஹிட்

பாடல்களும் ஹிட்..

மிக பிரமாண்டமாக  தான் தயாரித்த விஜயகாந்த் படங்களுக்கு விளம்பரங்கள் செய்தார்..

 

ஊமை விழிகள்!

ஆபாவாணன்!

DSP தீனதயாளன்!

அதிரடி வெற்றி!

உழவன் மகன்! மகா வெற்றி!

Tms பாடிய நான் தினம் தேடும் தலைவன்...

மிக பெரிய வெற்றி.

 

புரட்சி கலைஞர்!

பட்டம் வழங்கியவர் கலைஞர்..

1987-88 ஆம் ஆண்டு வாக்கிலேயே பல பெண்கள் இவரை MGR உடன் ஒப்பிட்டு நல்லவர்,

ஏழைக்கு இரங்குபவர்,

பசித்த முகம் காண,

பசி குரல் கேட்க பொறுக்க மாட்டார் என்று பேசினார்கள்.

ஆம். தமிழ் நாட்டு பெண்கள் பேசினார்கள்..

 

புலன் விசாரணை..

ஹானஸ்ட் ராஜ்...

காப்டன் பிரபாகரன்...

R. K. செல்வ மணி..

விஜய காந்த்..

 

அருமையான காலம் அது.

மணிவண்ணன், வாகை சந்திர சேகர், விஜயகாந்த், தியாகு ஆகியோர் ஒன்றாக இருந்த காலம்.

நூறாவது நாள்!

மோகனோடும் இணைந்து நடித்தார்.

பெரிய வெற்றி..

 

வைதேகி காத்திருந்தாள்!

ஒரு தீபாவளி வெளியீடு..

அலங்காரில் அந்த தீபாவளிக்கு அதிரடி ஹிட் நல்லவனுக்கு நல்லவன்...

மிட்லேண்ட் திரை அரங்கில் வைதேகி..

நூறாவது நாளை இரு படங்களும் நெருங்க,

அலங்காரில் நல்லவனுக்கு நல்லவன் பார்க்க நூறு பேர் கூட இல்லை.

வைதேகி காத்திருந்தாள் ஹவுஸ் புல்..

 

அம்மன் கோயில் கிழக்காலே..

இன்னொரு R. சுந்தரராஜன், விஜயகாந்த், இளையராஜா கூட்டணி வெற்றி..

 

ராதிகா, விஜயகாந்த்..

தாணுவின் நல்லவன் படத்தில் இணைந்தர்கள்..

வாழ்விலும் இணைவார்கள் என்றே பேச்சு இருந்தது.

அது நடந்திருந்தால் விஜயகாந்த் முதல்வர் ஆக ஆகியிருக்கலாம்.

 

1995 ஆம் ஆண்டில் கலைஞருக்கு மிக பெரிய பாராட்டு விழா..

கடற்கரையில்..

லட்சம் பேர் திரண்ட விழா!

மருந்துக்கு கூட காவலர்கள் அனுப்ப படவில்லை..

விஜயகாந்த் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்தே கட்டுகோப்புடன் நடத்தி காட்டினார்.

அணுவளவு அசம்பாவிதமும் நிகழாமல் நடத்தி காட்டினார் 

 

நடிகர் சங்கத்தை வெகு திறமையாக நிர்வகித்தார்..

கடனில் இருந்து மீட்டார்.

நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலத்தை மிக மிக பாதுகாப்பாக, அருமையாக திட்டமிட்டு நடத்தி காட்டினார்..

 

முதல் தேர்தலில் அவர் மட்டுமே வெற்றி பெற்றார்..

ஆனால் வாங்கிய வாக்குகள்!

மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி என்றார்.

இரு தரப்புமே கை விட வில்லை.

 

ரமணா!

புதியதோர் பரிமானம்!

ஊழலை காப்டன் ஒழிப்பார் என்று இளைய தலைமுறை மெய்யாகவே நம்பிய நாட்கள் அவை..

 

எவ்வளவோ சொல்லலாம்..

எவ்வளவையோ சொல்லாமல் விட்டும் விடலாம்.

 

உதிர்ந்த துருவ நட்சத்திரம்!

ஆழ்ந்த இரங்கல்!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.