சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஆரம்ப காலப் படங்களில் முழுக்க முழுக்க வில்லனாத் தான் நடித்து வந்தார். அவரது பழைய படங்களைப் பார்த்தால் தெரியும். அவர் கமல் நடித்த படங்களில் தான் வில்லனாக நடித்து அசத்தி இருப்பார். அவர்கள் இருவரும் நன்றாக நடிப்பதால் அந்தப் படங்களுக்கு தனி மவுசு இருந்தது.
ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக அந்தப் படங்களைப் பார்க்கச் செல்வார்கள். இது தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தைத் தந்தது. ஒரு கட்டத்தில் இதை உணர்ந்த கமல், ரஜினியிடம் இனி நீயும், நானும் சேர்ந்து நடிக்க வேண்டாம். தனித்தனியாக நடிப்போம். அது தான் உன் வளர்ச்சிக்கு நல்லதுன்னு சொல்கிறார்.
தனது நண்பர் சொன்னதால் ரஜினியும் கேட்டுக் கொண்டு தனியாக நடித்து ஹீரோவானார். அதன்பிறகு தனது தனித்திறமையால் சூப்பர் ஸ்டாராகவும் உயர்ந்தார். அந்த வகையில் கமலும், ரஜினியும் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்த 16 வயதினிலே படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.
அந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதேவி நடித்து இருப்பார். அந்தப் படத்தைப் பற்றிய சுவையான தகவல் தற்போது இணையதளத்தில் கசிந்துள்ளது. அந்தப் படத்தில் ஒரு காட்சியில் ரஜினியின் முகத்தில் ஸ்ரீதேவி காரித் துப்ப வேண்டும். அந்தக் காட்சியில் இயக்குனர் அவரை நடிக்கச் சொல்ல என்னால் அப்படி நடிக்க முடியாது என்று அவர் மறுத்துள்ளார்.
கதைக்கு அது அவசியம் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. இல்லை அவர் என்னை விட வயதில் மூத்தவர். அப்படி செய்வது சரியாகாது என்று மறுத்துவிட்டாராம் ஸ்ரீதேவி. அப்புறம் அதைத் தனித்தனியாக இருவரும் நடித்து எடிட்டிங்கில் சேர்த்து விட்டார்களாம். இப்போது அந்தக் காட்சியைப் பார்த்தாலும் ‘ஆமாம்’ என்று நமக்குச் சொல்லத் தோணும். அந்தக் காலத்தில் இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டு பட்டையைக் கிளப்பியது. கமல் சப்பாணியாகவும், ரஜினி பரட்டையாகவும், ஸ்ரீதேவி மயிலாகவும் நடித்து அசத்தினார்கள்.
1977ல் பாரதிராஜா இயக்கிய படம் பதினாறு வயதினிலே. இந்தப் படத்தில் தான் ஸ்ரீதேவி கதாநாயகியாக அறிமுகம் ஆனார். கமல், ரஜினி இணைந்து நடித்த படம். எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரிக்க இளையராஜா இசை அமைத்துள்ளார். கலைமணி வசனம் எழுதியுள்ளார். படத்தில் காந்திமதி, பாக்கியராஜ், சத்யஜித், கவுண்டமணி உள்பட பலரும் நடித்துள்ளனர். ஆட்டுக்குட்டி, சோளம் விதைக்கயிலே, மஞ்சக்குளிச்சு, செந்தூரப்பூவே, செவ்வந்தி பூவெடுத்த ஆகிய மனது மறக்காத பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
நன்றி: தேன் மொழி