Breaking News :

Thursday, November 21
.

ஜீன்ஸ் அணிந்த வைஜயந்தி மாலா; அந்த காட்சிக்காகவே திரண்ட ரசிகர்கள்?


அந்தக் காலத்து காதல் மன்னன் ஜெமினி கணேசனை பாட்டில் கவிஞர் கண்ணதாசன் கிண்டல் செய்த நிகழ்வும், நடிகை வைஜெயந்தி மாலா ஜீன்ஸ் அணிந்து நடித்ததால், அந்த காட்சிக்காகவே ரசிகர்கள் திரண்டதையும் இன்றைய கிளாஸிக் ஸ்டோரியில் விரிவாகப் பார்க்கலாம்.

இயக்குநர் ஸ்ரீதரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சித்ராலயா தயாரித்த முதல் படம் தேன் நிலவு. இந்த படத்தில் அந்தக் காலத்து காதல் மன்னன் ஜெமினி கணேசன்,  நடிகை வைஜெயந்தி மாலா, நடிகர்கள் தங்கவேலும், எம்.என். நம்பியார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தேன் நிலவு என்ற படத்தின் பெயரைக் கேட்டதும் ஏதோ ஜெமினி கணேசனுக்குதான் தேன் நிலவு என்று நினைத்து விடாதீர்கள். உண்மையில், தேன் நிலவு இந்த படத்தில் வைஜெயந்தி மாலாவின் அப்பாவாக நடிக்கும்

தங்கவேலுவுக்குதான் தேன் நிலவு. ரொம்ப ஜாலியான இந்த படத்தை இயக்குநர் படப்பிடிப்பை ஒரே ஷெடியூலில் முடிக்க திட்டமிட்டிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பி பெரும்பாலும் காஷ்மீரில்தான் நடந்தது. ஒரே ஷெடியூலில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்ட இயக்குநர் ஸ்ரீதர், என்ன செலவானாலும் பரவாயில்லை என்று, படத்தில் நடிக்கும் முக்கியமான நடிகர்களையும் அவர்களின் குடும்பங்களையும் காஷ்மீருக்கு அழைத்து சென்றார். அப்போது, ஜெமினி கணேசனுக்கு 2 குடும்பம். 1 பாப்ஜி, 2 சாவித்திரி. இந்த 2 குடும்பங்களையும் காஷ்மீருக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது நடிகை வைஜெயந்தி மாலா ரொம்ப புகழ் வெளிச்சத்தில் இருந்த நடிகை. தேன் நிலவு படத்தில் நடிக்க ஒப்பந்தமான வைஜெயந்தி மாலா, ஜீன்ஸ் பாண்ட் அணிந்து நடித்திருப்பார். வைஜெயந்தி மாலா ஜீன்ஸ் அணிந்து நடித்த காட்சியைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலபேர் திரண்டு சென்று பார்த்துள்ளனர்.

இந்த படத்தில் பனிச் சறுக்கு காட்சிகள் எல்லாம் இருக்கும்.  பனிச் சறுக்கு காட்சி படம்பிடிக்கும்போது, வைஜெயந்தி மாலாவுக்கு பனிச்சறுக்கு குச்சி காலில் குத்தி காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீதர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். பெரிய காயம் இல்லை. ஆனால், வைஜெயந்தி மாலா அடிபட்டதை தனது பாட்டியிடம் மட்டும் சொல்லிவிடாதீர்கள் என்று கூறியுள்ளார். அடிபட்டது அவருக்கு தெரிந்தால், சென்னைக்கு அழைத்துச் சென்றுவிடுவார். என்னால் படப்பிடிப்பு பாதிக்கும். நான் 2 நாள் கழித்துகூட வந்து படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன் என்று வைஜெயந்தி மாலா கூறியிருக்கிறார்.

இந்த படத்துக்கு ஏ.எம். ராஜா இசையமைத்துள்ளார்.  இந்த படத்தில் புகழ்பெற்ற ஒரு பாடல் இருக்கிறது. இன்றைக்கும் அந்தப் பாட்டு லவ்வர்ஸ் வைப் பாட்டுதான். அது “ஓஹோ எந்தன் பேபி, நீ வாராய் எந்தன் பேபி” என்ற பாடல்தான் அது.  கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஏ.எம். ராஜா, பாடகி ஜானகி பாடியுள்ளனர்.

அந்தக் காலத்தில் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் எல்லா நடிகர்கள், நடிகைகளுக்கும் செல்லப்பெயர் உண்டு. பத்மினியை பேபி என்று அழைப்பார்களாம். அதே போல, வைஜெயந்தி மாலாவை பாப்பா என்று அழைப்பார்களாம். ஆனால், இந்த பாட்டில் ஓஹோ எந்தன் பாப்பா என்றால் நல்லா இருக்காது என்பதால், பாடல் எழுதிய கண்ணதாசன் ‘ஓஹா எந்தன் பேபி” என்று எழுதியுள்ளார்.

 அதுமட்டுமல்ல, இந்த படத்தில் நடிக்கும் காதல் மன்னன் ஜெமினி கணேசனை கிண்டல் செய்யும் விதமாக காதல் மன்னன் என்பதை மறைமுக எழுதி கிண்டல் செய்திருப்பார். இந்த பாடலின் இசையும் மிகவும் அருமையாக இருக்கும்.

“ஆண் : ஓஹோ எந்தன் பேபி
நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஆண் : ஓஹோ எந்தன் பேபி
நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பேபி
பெண் : ஓஹோ எந்தன் டார்லிங்
நீ வாராய் எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
பெண்: ஓஹோ எந்தன் டார்லிங்
நீ வாராய் எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்
ஆண் : பூவில் தோன்றும் மென்மை
உந்தன் பெண்மை அல்லவா
பெண் : தாவும் தென்றல் வேகம்
உங்கள் கண்கள் அல்லவா
ஆண் : பூவில் தோன்றும் மென்மை
உந்தன் பெண்மை அல்லவா
பெண் : தாவும் தென்றல் வேகம்
உங்கள் கண்கள் அல்லவா
ஆண் : இன்னும் சொல்லவா
பெண் : அதில் மன்னன் அல்லவா
ஆண் : அந்த எண்ணம் போதும் போதும்
எந்தன் பேபி இங்கு வா
ஆண் : ஓஹோ எந்தன் பேபி
நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
பெண் : ஓஹோ எந்தன் டார்லிங்
நீ வாராய் எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்
பெண் : எங்கும் இன்ப வெள்ளம் கண்டு
பொங்கும் உள்ளமே
ஆண் : ஓடும் இந்த ஓடம் கூட
பாடல் பாடுமே
பெண் : எங்கும் இன்ப வெள்ளம் கண்டு
பொங்கும் உள்ளமே
ஆண் : ஓடும் இந்த ஓடம் கூட
பாடல் பாடுமே
பெண் : வேகம் போதுமா
ஆண் : இது காதல் வேகமா
பெண் : என்னை காணும் போதும்
உங்கள் கண்கள் காதல் தேடுமா
பெண் : ஓஹோ எந்தன் டார்லிங்
நீ வாராய் எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஆண்: ஓஹோ எந்தன் பேபி
நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பேபி”  

இந்த பாடலை நீங்களே பாடிப் பாருங்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.