வேடிக்கையும் உற்சாகமும் நிறைந்த இரவுகள்! புனிதமான வேடிக்கை!! கனவுகளை நனவாக்கும் இரவுகள்!! என்று மலையாள போஸ்டர் வாசகங்கள் அலங்கரித்தன .
எனக்கு நினைவு தெரிந்து ஆபாச படம் என முத்திரை குத்தப்பட்டு வெளிவந்த மலையாள படம் தான் அவளுடே ராவுகள். மலையாள திரையுலகில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற முதல் படம் என்று பெருமை பெற்ற படம் இது .சிறு சிறு வேடங்கள் க்ரூப் டான்ஸர் என ஆடிக்கொண்டிருந்த .சீமாவை மலையாள சினிமாவுக்கு முழு கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது. இந்த படத்தின் தாக்கம் அப்போது திரை ரசிகர்களிடம் அதிகம் ஏற்படுத்தி இருந்தது .
தமிழில் " அவளின் இரவுகள் ' என பெயர் வச்சி டப்பிங் காது குத்தப்பட்டது இதன் பிறகுதான்....
பட விநியோகஸ்தர்களுக்கு மலையாள படங்களுக்கு கவர்ச்சியாக தலைப்பு கொடுத்து ஓட்டலாம் என்று உற்சாக பல்ப்' எரிந்தது .இவ்வகை மலையாள படங்களை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கும் ரசிகன் பார்வை இந்த படத்தில் இருந்து மாறியது .
அப்போது இந்த படத்தின் போஸ்டரை பார்த்தாலே ஜிவ்வென்று என்னமோ பன்னும்!! படம் பார்க்க பேராவல்...ஆனால் என்னமோ பாவ செயல் செக்ஸ்படம் என முத்திரை குத்தப்பட்டு விட்டதால் படம் பார்க்க போகும்போது யாரும் பார்த்து விடுவார்களோ என்ற அச்சம்!ஒரு நாள் துனிந்து செங்கம் தியேட்டருக்கு தனியா சைக்கிளில் மேட்னி ஷோ பார்க்க போய் விட்டேன்..செம கூட்டம் ஒரு வழியா சேர் டிக்கட் எடுத்துடு உள்ளேபோய் உக்காந்து ஆசுவாசமா சுத்துமுத்தும்.பார்த்தால்..முந்துன ரோவில் கொடிக்கால்பாளையத்தை சேர்ந்த உறவினர்!! உக்காந்து இருக்கார் சொரேர் என்றது..அப்படியே ஜகாவாங்கி பின் சீட்டுக்கு தாவி ஒரு மட்டமான சீட்டில் உட்கார்ந்தேன்..வியர்வை தொப்பலாக நனைய..படம் எப்படா போடுவான் என தவிக்க..2.30 மணிக்கு படம் போட்டான்..எழுத்து ஓடி முடிஞ்சதும் சம்பந்தமே இல்லாமல் கலரில் ஒரு பிட்டு படம் ஒரு நிமிஷம் ஓடியது!! தியேட்டரே அபார சைலன்ஸ்! ஆராவாரமாய் கைதட்டி விசில் அடித்து பார்த்த தியேட்டர் இப்படி ஊசி விழுந்தால்கூட சத்தம் கேட்கும் அளவு அமைதி என்பது நான் பார்த்த புதுமை!
ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு மாதிரி நெளியல்😁
கதை: ஒரு இளம்பெண் ராஜி என்ற டீன் ஏஜ் பாலியல் தொழிலாளியைப் பற்றிய திரைப்படம், பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு தனது சிறிய சகோதரனை வளர்ப்பதற்காக தனிமையில் போராடும் .ராஜி பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்.
இவளுடைய வாழ்க்கையில் இவள் சந்திக்கும் மூன்று நபர்கள் சந்திரன் , ஜெயன் மற்றும் பாபு ஆகியோருடன் பிணைத்து நீண்டதுதான் அவளுட ராவுகள் . சந்திரனாக MG சோமன், ஜெயனாக சுகுமாரன் மற்றும் பாபுவாக நடிக்கும் ரவிக்குமார் நடித்திருப்பார்கள் .
கதைக்களம் பாலியல் தொழிலாளியைப் பற்றியது என்பதால் ஆங்காங்கே கவர்ச்சி காட்சிகள் தெளிக்க பட்டு இருந்தாலும் அது அடைமழையாக கருதப்பட்ட அந்த காலம் ...அது வசந்த் அன் கோ காலம் . என்ன செய்ய ? அது போதாதென்று தியேட்டர் காரன் இனைப்பாக நாலு சீன் புளூபிலிமை சொருகி விடுறான்! (செங்கம் தியேட்டர் இப்படி இடைசொருகல் செய்ததால்தான் லைசண்ஸ் கேன்சல் ஆனது என்ற பேச்சும் உண்டு)அப்போது சீமா எனும் சிறந்த நடிகை ஒரு சன்னிலியோன் போலவும்..மலையாள படம் என்றாலே புளூபிலிம் எனவும் கருத்து பதிந்து இருந்தது!
இப்பொது மலையாளம் படம் பார்த்ததை பெருமையாக சொல்வது" ட்ரெண்ட் போல மலையாள படத்தை பார்த்தேன் என்று மூச்சு கூட விடக்கூடாது" என்ற ட்ரெண்ட் இங்குதான் ஆரம்பித்தது என்பதை மறுக்கவா முடியும் !
(யார் யார் திருட்டுத்தனமா இந்த மாதிரி A படம் பார்த்து இருக்கீங்க? கையை தூக்குங்க!!)