திரைக்கதை என்றாலே பாக்யராஜ் அவர்கள்தான் என டக்கென சொல்லிவிடுவார்கள் அவ்வளவு துல்லியமாக எவருமே குறை சொல்லாத அளவுக்கு எழுதி இயக்கிடுவார் . சின்ன குறை இருந்தா கூட ஏதாவது பண்ணி சரி செய்துவிடுவார். தான் கண்ணாடி போட்டிருந்தால் முக்கிய கதாபாத்திர நாயகிகளுக்கும் போட்டுவிடுவார்.
பொருத்தம் சரியா இருந்தால் விட்டுவிடுவார். தான் நகைசுவை பண்ணினாலும் மற்றவங்களுக்கு அதிகபடியான வாய்ப்புகளை அளித்து நகைசுவையை அள்ளிடுவார். ஒரு ஆல்ரவுண்டர் என்றே சொல்லலாம் .
பாக்கியராஜ் படம் என்றாலே இளையராஜா இல்லாமல் படம் வராது அப்படி ஒரு காலக்கட்டம். அந்த நேரத்தில் இவருக்கும் அவருக்கும் இடையில் சின்ன சின்ன பூசல் ஏற்பட்டு மூன்றாவது நபர் மூலம் பிரிந்த நிலை ஏற்ப்பட்டது. அதனால் இதுநம்மாளு படத்திற்கு இவரே இசை அமைத்தார். பாடல்களும் சூப்பர் ஹிட்டானது...கதைகளம் எடுத்துக்கொண்ட விதமோ .. இந்திய திரைபட வரலாற்றில் இப்படி எடுக்க துணிச்சல் வேண்டும் என பேசப்பட்டது.
ஒரு முடிவெட்டும் சாதியை சார்ந்தவர் ஐயங்கார் பெண்ணை மணப்பதுதான் கதை. மிகப்பெரிய சவாலன திரைக்கதையை எழுதி வெற்றியும் பெற்றார் .கதைக்காகவே படம் பட்டையை கெளப்பியது. எல்லா சாதிகளும் சாஸ்திரங்களும் மனிதரகளால்தான் உருவக்காப்பட்டது என்று ஆணிதரமா சினிமா மூலம் அப்பவே நிருப்பித்தார்.
ஆனால் இன்று நசுக்கிட்டாங்க, பிதுக்கிட்டாங்கா, ஒதுக்கிட்டாங்கன்னு படம் எடுத்து அசிங்க பட்டுக்கிறாங்க சில இயக்குனர்கள்.. நல்ல கருத்துக்களை சொன்ன பாக்கியராஜ் படம் பல வகையில் பேசப்பட்டது..இன்னும் சொல்லப்போனால் இவரை போல இயக்குனர்கள் இனி வரப்போவதில்லை... இதுநம்மாளு பேசப்பட்ட படம் தான்...