Breaking News :

Saturday, December 21
.

அவளுடன் நானும் இறந்துவிட்டேன்! - விஜய் ஆண்டனி உருக்கம்


இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தன்னுடைய மகள் மரணம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நெஞ்சை நெகிழச்செய்யும் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
அன்பு நெஞ்சங்களே,
என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்று இருக்கிறாள்.
என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்.
உங்கள் 
விஜய் ஆண்டனி" என்று குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/vijayantony/status/1704860844872610169

விஜய் ஆண்டனியின் மகள் சமீபத்தில் தூக்கில் தற்கொலை செய்துகொண்டார். எந்த ஒரு விஷயத்திற்கும் தற்கொலை தீர்வு இல்லை. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்து உயிரிழக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதில் 37 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் இளையோர். 
பிரச்னைகள் வந்துகொண்டுதான் இருக்கும். பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் என யாரிடமாவது மனம் விட்டு பேச வேண்டும். தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று எண்ணம் வந்தால் தகுந்த ஆலோசகர்களைத் தொடர்புகொண்டு பேசி தெளிவு பெறலாம்.
104 என்ற எண் அல்லது 9152987821 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு பேசி ஆலோசனை பெறலாம்!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.