இன் தி ரியல் ஆஃப் சென்ஸ் திரைப்படம் இயக்கியவர் Nagisa Oshima.
1936 ஆம் ஆண்டு ஜப்பானிய உணவு விடுதியில் வேலைக்குச் சேருகிறாள் ஸதா என்கிற முன்னாள் விலைமாது. அவளின் மேல் காமமுறுகிறான் விடுதியின் முதலாளி.
இருவரும் உடலும் உள்ளமும் ஒன்றிய நிலை முற்றும்போது, தன்னைத் தவிர வேறொரு பெண்ணைக் கூட பார்க்கக்கூடாது என்று ஸதா நிபந்தனை விதிக்கிறாள், அந்த விதி முதலாளியின் மனைவிக்கும் பொருந்தும்.
ஆனால் இது ஒருபோதும் நடைமுறைக்கு ஒத்துப் போகவில்லை. அவன் மனையிடமும், மற்ற பெண்களுடனும் உறவு கொள்ளும்போது ஸதாவால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.
விளைவு மோசமாகிறது. இறுதியில் அவனுடைய உறுப்பையே வெட்டி விடுகிறாள். இந்தப் படம் நிஜக் கதையை தழுவி எடுக்கப்பட்டது. அவள் அவனுடைய உறுப்பை கையி வைத்துக் கொண்டு டோக்கியோ நகர வீதிகளில் இரண்டு நாட்கள் சுற்றியதாகவும் பின்னர் இறந்துபோனதாகவும் வரலாறு.
இந்தத் திரைப்படத்தை ஒரு சமயத்தில் இயக்குநர் ஒஷிமா திரையிடல்களிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார். ஆனாலும் டிவிடி வடிவத்தில் இந்தத் திரைப்படம் இப்போதும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.
இயக்குநர் ஒஷிமா ஜப்பானிய திரைப்பட உலகத்தின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர்.
இவர் இயக்கிய முக்கிய திரைப்படங்கள்: Death by Hanging, the Ceremony, Diary of a Shinjuku Thief.