Breaking News :

Thursday, November 21
.

இந்தியன் 2 எப்படி இருக்கிறது?


இந்தியன் படத்தின் மிகப்பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கும் இரண்டாம் பாகம் எப்படி இருக்கிறது ?  

இந்தியன் படத்தை மிஞ்சுவது என்பது இயலாத காரியம். அதனால் இயக்குநர் அதை மறந்து வேறு அனுபவம் தர முயன்றிருக்கிறார். என்னிடம் இன்னும் சரக்கு தீரவில்லை என ஷங்கர் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

இந்தப்படம் இரண்டு விதமான விமர்சனங்களைக் குவிக்கும் ஒன்று சூப்பர் இன்னொன்று படு மொக்கை. இந்த இரண்டிற்கும் காரணம் படத்தில் இருக்கிறது.

இந்தியாவிலேயே மிகச்சிறந்த கமர்ஷியல் டைரக்டராக திரும்பி பார்க்க வைத்தவர் ஷங்கர்.

அதுக்கு முக்கிய காரணம் இந்தியன் படம் தான். அதன் இரண்டாம் பாகம் எனும்போது,
அதில் எத்தனை விமர்சனங்கள் வருமென்று தெரிந்தே தான் முயற்சித்திருக்கிறார்.

அவர் சொல்லும் கருத்துக்களில் எல்லாம் எவ்வளவோ விமர்சனங்கள் இருக்கிறது.  ஆனால் அதைத்தாண்டி அவர் ஒரு அசத்தலான கமர்ஷியல் டைரக்டர்.

கிட்டதட்ட மாடர்ன் மெகா கமர்ஷியல் படங்களின் ப்ளூ பிரிண்ட் அவர் உருவாக்கியது தான்,  சமீபத்து ஜவான் பார்த்தாலே தெரியும்.

இதில் முழுமையாக அவரின் சாயல் மீண்டும் தெரிந்தது அதுவே மிக சந்தோசமாக இருந்தது.

உண்மையிலேயே ஒரு அசத்தலான கதை எழுதியிருக்கிறார்கள் ஆனால் அதை இரண்டு பாகமாக உடைத்ததில் தான் பிரச்சனை.

ஷங்கர் உண்மையில் கருத்து சொல்லும் சீரியஸ் டைரக்டர் எல்லாம் இல்லை, இந்தியனில் கூட மனிஷா, ஊர்மிளா, கவுண்டமணி,  செந்தில்  என அனைத்தையும் கலவையாக கச்சிதமாக இணைத்து விடுவார். அவரின் எல்லாப் படங்களிலும் இது இருக்கும்.

கதை, செண்டிமெண்ட், காமெடி, பிரமாண்டம் எல்லாமே ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும். அவர் காட்சியை உருவாக்கும் விதம் எப்பவும் பிரமிப்பு தரும்.

ஒரு வகையில் அது விளம்பரப்  பட பாணி. உலகளவில் நிறைய விளம்பரம் பார்த்திருப்பீர்கள், ஒரு சின்ன உணர்வுக்கு ஒரு நிமிடத்தில் எத்தனை பிரமாண்டம், எத்தனை ஷாட், எத்தனை கட்ஸ் என பிரமிப்பு தரும்.

ஒரு நல்ல விளம்பரம் பாருங்கள் அதில் எமோஷன் இருக்கும், சொல்ல வந்த கருத்து நறுக்கு தெரித்தாற் போல இருக்கும். அதே நேரம் பிரமாண்டம் இருக்கும்.

ஷங்கர் ஒவ்வொரு காட்சியையும் அப்படித்தான் அணுகுவார். இடையில் அவரிடம் கதை இல்லாத  தவிப்பு இருந்தது ஆனால் இதில் நல்ல கதையோடுதான் வந்திருக்கிறார்.

இதன் ஒரே பிரச்சனை இரண்டு பாகம் ஒரு பாகம் ஆனது தான்.

இன்றைய நாட்டின் பிரச்னைகளில் இளைஞர்கள் கொதிக்கும்போது, இந்தியன்  தாத்தா மீண்டும் வருகிறார். நாட்டை திருத்த இளைஞர்களுக்கு  அவர் ஒரு  அறிவுரை தருகிறார். இன்னொரு பக்கம் அவரும் அவர் வேலையைச் செய்கிறார். ஆனால் இந்தியனை மக்களே வெறுத்தால் என்னவாகும்?  அது தான் இந்தியன் 2.

படத்தின் கேமரா அத்தனை அற்புதம் அது தான் இந்தியன் தாத்தாவின் மேக்கப் கேவலமாக இருக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது.

மியூசிக் ஆமாம் அனிருத், ஏ ஆரின் பக்கம் கூட வரவில்லை. படம் முழுக்க நட்சத்திரங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் பாதிப் பேரின் கதை அடுத்த பாகத்தில் தான் வருமாம்.

சுஜாதாவின் இழப்பும், வசனங்களில் தெரிகிறது ஒரு வசனம் கூட அழுத்தமாக இல்லை.

இதில் ஒரிஜினல் மிஸ்ஸிங் என்றால் மனிஷா, கவுண்டமணி செந்தில் எபிஸோடு தான்.

கவர்ச்சியும் இல்லை பெரிய அளவில் காமெடியும் இல்லை. இது தான் ஒரிஜினலான மைனஸ். சமீபத்தில் ஹரி கூட இதே தவறைச் செய்தார்.

ஒரு கமர்ஷியல் படத்திற்கு நார்மல் ஆடியன்ஸுக்கு படத்தில் இது ரெண்டும் இருப்பது மிக முக்கியம்.

இதை இரண்டு பாகமாக்கியதால் இண்டர்வெல்லை க்ளைமாக்ஸ் ஆக்கிவிட்டார்கள். அதனால் இண்டர்வெல் ஒர்க்காவில்லை.

படத்தின் க்ளைமாக்ஸ் எந்தப் பதட்டமும் இன்றி முடிகிறது.  ஆனால் படத்தில்  இத்தனை பிரச்னைகள் தாண்டி ஷங்கர் தன் மேக்கிங்கில் 3 மணி நேர படத்தை சலிக்காமல் பார்க்க வைத்தார்.

படத்தின் மொத்த சர்ப்ரைஸும் அடுத்த பாகத்தில் தான் இருக்கிறது. க்ளைமாக்ஸில் வரும் அந்த டிரெய்லர் அட்டகாசம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.