நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடிகள் பிரிந்த பின்னர், அவரவர் அவர்களின் துறைகளில் கவனத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அன்கித் திவாரி இசையமைப்பில் முஸாபிர் என்கிற பாடலுக்கான படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார். 3 மொழிகளில் வெளியாகப்போகும் இப்பாடலை தமிழில் அனிருத் பாடுகிறார், அதேபோல தெலுங்கு மொழியில் சாகர் என்பவரும் மற்றும் மலையாள மொழியில் ரஞ்சித் கோவிந்த என்பவரும் பாடியுள்ளனர்.
இந்த செய்தியை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'முஸாபிர்' பாடல் செட்டில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களுடன் பாடலின் படப்பிடிப்பு நிறைவுற்றதாகவும், தன்னுடன் இணைந்து பணியாற்றிய குழுவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.