தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தவர் நடிகர் சிவாஜி கணேசன், நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவாஜி வீர வசனங்கள் பேசி நடித்ததன் மூலம் மக்களை வெகுவாக ஈர்த்தார். தன் கணீர் குரலால் அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் சிவாஜி. இவருடைய முதல் படமாக பராசக்தி திரைப்படம் அமைந்தது.
அந்தப் படத்தில் கோர்ட் சீனில் பேசும் வீர வசனங்கள் இன்று வரை அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கும் வசனமாகவே பார்க்கப்படுகிறது. சினிமாவில் யாராவது நடிக்க ஆசைப்படுகிறார்கள் என்றால் அவர்கள் எடுக்கும் முதல் ஆயுதம் பராசக்தி படத்தில் அமைந்த அந்த சீன் தான்.
அதை உணர்ச்சிகரமாக பேசி ஆடியன்ஸை திசைதிருப்பி விடுவார்கள். உணர்ச்சி பொங்க சிவாஜி பேசினாலும் அந்த வசனத்திற்கு சொந்தக்காரராக விளங்கியவர் கலைஞர் மு. கருணாநிதி. அவரால் தான் இப்படிப்பட்ட திராவிட வசனங்களை கொடுக்க முடியும்.
நாட்டில் மூட நம்பிக்கைகளாக எதை மக்கள் நம்பி இருந்தார்களோ அதை அந்தப் படத்தில் வசனமாக வைத்திருந்தார் கருணாநிதி. இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து உலகப்புகழ் பெற்றார் சிவாஜி. புராணக் கதைகள், காவியங்கள், வரலாற்று தலைவர்களின் படங்கள் என எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து இன்று சினிமாவின் ஒரு என்சைக்ளோப்டிவாக இருக்கிறார் சிவாஜி.
கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகள் கண்ட நடிகராகவும் சிவாஜி இருந்தார். ரஜினி கமல் இவர்களுடன் நடித்து பின் விஜய் காலத்திலும் பல படங்களில் நடித்தார். அதே போல் அடுத்தடுத்த தலைமுறை இயக்குனர்களுடனும் பயணித்தார் சிவாஜி .
இந்த நிலையில் 70களில் கடைசியில் 80களில் சினிமாவை தன் ஆதிக்கத்தில் வைத்திருந்த கே. பாலசந்தர் இயக்கத்தில் ஒரே ஒரு படத்தில் தான் நடித்திருந்தார் சிவாஜி. அந்தப் படத்தின் பெயர் எதிரொலி.
ஆனால் அந்தப் படம் சரியாக ஓடவில்லை. அதனால்தான் அடுத்தடுத்து பாலசந்தர் சிவாஜியை வைத்து படம் பண்ணவில்லை என சித்ரா லட்சுமணன் கூறினார்.