பாடல்கள் எழுதுவதை தாண்டி, அம்மா, அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜர் காவியம் என சுமார் 16 புத்தகங்களை எழுதி உள்ளார்.
எம்.எஸ்.வி மற்றும் இளையராஜாவிற்கு அதிக பட்ச பாடல்களை எழுதியுள்ள வாலி, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த சில படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார். அப்படி இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் எழுதிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
வாலி கொடுத்த பழைய பேட்டி ஒன்றில்... "நீங்கள் ஷங்கருக்கு எழுதும் பாடல்கள் மட்டும் எப்படி, ஹிட் பாடல்களாக மாறி விடுகிறது என கேள்வி எழுப்பப்பட்டது". இதற்க்கு பதில் அளித்த வாலி "ஷங்கர் எப்போதுமே... நீங்க இப்போவே பாடல் எழுத வேண்டும் என கட்டாய படுத்த மாட்டார் என கூறி 'இந்தியன்' படத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
'இந்தியன்' படத்தில் வாலி எழுதி சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற 'மாயா மச்சீந்திரா' பாடலை படமாக்க... ஷங்கர் 100 டான்சர்களை வரவைக்கு மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைத்து விட்டு, பாடல் வேண்டும் என என்னிடம் சொன்னார். நான் அப்போது எனக்கு இப்போதைக்கு ஒன்னும் தோன்றவில்லை என கூறினேன்.
அவர் என்னை அவரச படுத்தாமல்... நீங்கள் 3 நாள் கூட டைம் எடுத்துக்கொள்ளுங்கள் நான் அவர்களை வெயிட் பண்ண சொல்கிறேன் என கூறி, அந்த 100 போரையும் காக்க வைத்தார். நான் மூன்று நான் கழித்து தான் 'மாயா மச்சீந்திரா' பாடலை அனுப்பினேன். அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது என கூறியுள்ளார்.
1994-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை எஸ்.பி.பி பால சுப்ரமணியத்துடன் இணைந்து, ஸ்வர்ணலதா பாடி இருப்பர். கமலை ஒரு மாயாவி போல ஷங்கர் இந்த பாடலில் காட்டி இருப்பார்.
இந்த படத்தில் வாலி மூன்று பாடல்களை எழுத, வைரமுத்து 2 பாடல்களை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.