அன்னா மலையாளத்தில் மிகச்சிறந்த 24 வயது இளம் நடிகை. ஒரு நடிகை தனது இளம் வயதில் பெண்ணியம் சார்ந்த பெண் தைரியம் போற்றும் படங்களில் நடிப்பது என்பது திரையுலகில் சாத்தியமற்றது. முன்பு நதியா அப்படி வந்தார். நதியாவின் படங்களில் நதியா பிரதானமாக தெரிவார்.
இப்போது அதே மாதிரி தான் அன்னா. பொதுவாக மலையாளி 20K kids பெண் குழந்தைகள் ஓவர் Attitude காட்டுவார்கள். ஆனால் அன்னா திரையில் காட்டும் உடல்மொழி இதற்கு நேர் எதிர். இயல்புத்தன்மையே கூடுதல் இருக்கும்.
அன்னா அறிமுகமான முதல்படம் 'கும்பளங்கி நைட்ஸ்'ஸில் அவருக்கு வித்தியாசமான ரோல். எதற்கும் பயப்படாத காதலில் விழும் இளம் பெண். Bobby என்கிற மனம் பேதலித்த, ஆக்ரோஷம் கொண்ட அக்காள் கணவரை(பகத் ஃபாஸில்) தன் காதலனோடு மீன்பிடி வலையில் சுருட்டும் வீரதீர பெண்.
தன் வசீகரச்சிரிப்பினாலும், சூட்டிகையான உடல்மொழியாலும் , பக்கத்து வீட்டுப்பெண் தோற்றத்தாலும் அன்னாவை மலையாள மக்கள் கொண்டாடினர். அதோடு அவர் தேர்ந்தெடுக்கும் ஸ்க்ரிப்ட்டுகளும். கும்பளங்கி நைட்சுக்கு பிறகு ஹெலன், நைட் ட்ரைவ், கப்பேளா போன்ற படங்கள் தனித்துவமான நடிப்பை வெளிக்கொண்டு வந்தவை.
ஹெலன் படத்தில் உறைய வைக்கும் ஃப்ரீசர் ரூமில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பிக்கும் பாத்திரத்தில் நடிப்பால் நமக்கு குளிரை உணர்த்தியவர்.
தமிழில் கீர்த்தி பாண்டியன் 'அன்பிற்கினியாள்' படத்தில் அவ்வளவு இயல்பு இல்லை.
Sara's படத்தில் முதலில் கெரியர்...குழந்தையே வேண்டாம் என நினைக்கும் பெண் இயக்குனர் பாத்திரம். அன்னா அழகாக பிரதிபலித்திருப்பார். 'நைட் டிரைவ்' படத்தில் காதலனுடன் இரவில் காரில் ட்ரிப் அடிக்கப்போய் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நிறைந்த கதை.
அன்னா பென்னின் தந்தை பென்னி.P. நாயரம்பலம் திரைக்கதாசிரியர். நாயரம்பலம் கொச்சியிலிருந்து வைப்பின் வழியாக கொடுங்கல்லூர் செல்லும் வழியிலுள்ள ஒரு ஊர். இந்த ஊரைச்சேர்ந்த பென்னி நாடகங்கள் எழுதுபவர். நடிகர் ராஜன் பி.தேவுக்காக இவர் எழுதிய நாடகம் கேரள அரசு விருதை வென்றிருக்கிறது. இவர் ராஜன் பி.தேவ் நாடகக்குழுவுக்காக எழுதிய கதைகள் திரைப்படங்களாக வெற்றி பெற்றிருக்கிறது.
இவர் எழுதிய 'விகலாங்க வர்ஷம்' கதை தான் மலையாளத்தில் திலீப் நடிக்க 'குஞ்ஞிக்கூனன்' என்கிற பெயரில் வந்தது. தமிழில் சூர்யா நடித்த 'பேரழகன்'. மற்றொரு நாடகம் 'அரபிக்கடலும்அற்புத விளக்கும்' திலீப் நடிக்க 'சாந்து பொட்டு' என்கிற படமாக வந்தது.
விக்ரம் நடித்த 'மஜா' பென்னியின் கதை தான். மலையாளத்தில் மம்முட்டி-லால்நடித்த 'தொம்மனும் மக்களும்'. முதன்முதலாக ப்ருத்விராஜ் சிக்ஸ்பேக்கில் அசத்திய 'லாலிபாப்' பென்னி எழுதிய கதையே..20க்கும் மேற்ப்பட்ட கதைகள் படங்களாக வந்து அவை சூப்பர் ஹிட்டுகளாகியுள்ளதும் பென்னியின் ஸ்பெஷல். மேரிக்குண்டொரு குஞ்ஞாடு, வாய் பேசாத, பேசும் மம்முட்டிகளாக 'அண்ணன்தம்பி' கதைகளெல்லாம் நல்ல கமர்ஷியல் கதைகள்.
அப்பா ஸ்க்ரிப்ட்ரைட்டர் என்பதால் அன்னா தேர்ந்தெடுக்கும் பாத்திரங்கள் அளவெடுத்து தைத்தது போல் அப்படி பொருந்துகின்றன. அன்னாவின் அப்படி ஒரு தேர்வு தான் 'கொட்டுக்காளி'. கொட்டுக்காளி படத்தில் சமூகத்தால் தாழ்த்தி அடிக்கப்பட்ட சாதியிலிருந்து வரும் பையனை திருமணம் செய்யும் போது வரும் பிரச்சினைகள் தான் கதையாகத் தெரிகிறது.
சிவகார்த்தியன் தயாரிப்பில் சூரி நாயகனாகும் 'கொட்டுக்காளி' மூலம் தமிழுக்கு வரும் அன்னா பென் தன் ஃபேவரைட் விரிந்த சிரிப்பின் மூலம் தமிழிலும் நல்ல பெயரெடுப்பார் என அடித்து சொல்லலாம்..!!
நன்றி: செல்வன் அன்பு.