Breaking News :

Thursday, November 21
.

கோழிப்பண்ணை செல்லதுரை Amazon Primeல் வெளியீடு!


நான் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் படத்தை பார்த்தேன். இதனை வேறு ஒரு நாட்டிலோ அல்லது மொழியிலோ வெளிவந்திருந்திருந்தால், அது உலகளவில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்தை, ஒரு மலையாளப் படமாக கற்பனை செய்து பாருங்கள், அதன் வெற்றி மகத்தானதாக இருக்கும்! இது உலகளவில் பெரும் வெற்றியடைந்திருக்க வேண்டிய ஒரு கலைப்படைப்பு.

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி Seenu Ramasamy Seenu Ramasamy தனது தனித்துவமான கதை சொல்லும் திறனுடன் இந்த படத்தை ஒரு அரிய கலை படைப்பாக மாற்றியுள்ளார். கிராமிய வாழ்க்கையின் சின்ன நுணுக்கங்களையும் மற்றும் ஆழமான சமூக பிரச்சினைகளையும், இந்த படத்தில் நுட்பமாகக் காட்சிபடுத்தியுள்ளார். அன்பு மற்றும் மன்னிப்பு போன்ற விஷயங்களை கையாண்டு, அதை பார்வையாளருக்கு உணர்த்தி, எப்படி ஒரு மனிதன் அவன் சோகமான கடந்த காலத்திலிருந்து வெளிவர முடியும் எனவும், தன் வாழ்க்கையை முறைப்படுத்தி கொண்டு செல்ல முடியுமெனவும், அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.

இந்த காலத்தில் பெரும்பாலான படங்கள் பரபரப்பை மட்டுமே கொடுத்து, அந்த ஆர்ப்பாட்டங்களுக்குள் தான் இடம் பிடிக்க முயல்கின்றன. ஆனால் கோழிப்பண்ணை செல்லதுரை அமைதி மற்றும் மனித அன்பின் ஆழத்துடன் இந்த படைப்புகளுக்கு இடையே தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது.

இந்த படத்தின் மெதுவான நகர்வு, நிதானமாக கருத்தை உணர்த்துகிறது. இந்த வகை படங்களை உடனே புரிந்து கொள்ளும் பொறுமையோடு பார்வையிடுவோம் என்றால், அதன் உண்மையான அழகு வெளிப்படும்.

இந்த படம், கலைத் திறனில் வெற்றிகரமாக வெளிவந்தாலும், பொருளாதார ரீதியில் அவ்வளவு பெரும் வெற்றியடைய வாய்ப்பு குறைவு என்று தோன்றுகிறது. ஆனால், இந்த படத்தை பெரிய நடிகர்களோடு இயக்கினிருந்தால், அது ஒரு வணிக ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியாக மாறியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. யோகி பாபு தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் நடிப்பில் சிறந்த முதிர்ச்சியைத் தருகின்றனர். இந்த படத்தில், இயக்குனர் தன் முழு தன்னம்பிக்கையையும் வச்சு, அவர்களுடைய பாத்திரங்களை மிகவும் தத்துரூபமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

கதாநாயகனின் மிகவும் இயல்பான நடிப்பிற்கு பாராட்ட வேண்டும். கதாநாயகனின் தந்தை "றியாஸ்" Riyazul Hussain A இளமையாகவும் சரி, முதியவரான வேடத்திலும் சரி சிறப்பாக நடித்துள்ளார். அவர் தன் மகன் சின்னவனாக இருக்கும் பொழுது அவனின் கையை திருகும் விதமும், அதே மகன் வளர்ந்து அப்பாவை பல ஆண்டுகளுக்கு பின் பார்க்கும் பொழுது, தன் கையை முதுகுக்கு பின்னாடி வைத்திருந்து பழையதை நினைக்கும் காட்சிகள் "றியாஸ்" மீது அவ்வளவு எரிச்சல் வர வைக்கின்றன. அப்பொழுதும் அந்த சிறுவன் "என்ன விட்டிட்டு போகாத அப்பா" என்று அழுவது பார்வையாளர்களை அழ வைக்கும் தருணங்கள்.

ரகுநந்தன் அவ்ரகளின் இசையமைப்பு படத்திற்கு சிறப்பாக பொருந்தியுள்ளது, குறிப்பாக தேவதை பாடல். பாடல்களை படத்திற்கு பொருத்தமாக எழுதியுள்ளனர் கவிப்பேரரசு வைரமுத்து, திரு.கங்கை அமரன், பா.விஜய் மற்றும் ஏகாதேசி அவர்கள்.

கோழிப்பண்ணை செல்லதுரை ஒரு மிக்க உணர்ச்சி மிக்க கலை படைப்பு. இது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் பாராட்டப்பட வேண்டிய ஒரு படைப்பு என்றே கருதுகிறேன். சம காலத்தில் வெளிவந்த லப்பர் பந்து, நந்தா, போகுமிடம் வெகுதூரமில்லை, வாழை போன்ற படங்களை போல இந்த படத்திற்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க வேண்டும். இந்த படம் ஆழமான கதைகளை விரும்பும் அனைவராலும் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய படைப்பாக இருக்குமென நம்புகிறேன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.