காலத்திற்கு ஏற்ப காதல் தன்னை மாற்றிக் கொள்கிறதே! தவிர, காதல் ஒன்று தான்.
ஒரு ஆணும் பெண்ணும் ஊடலில் ஆரம்பித்து பின் காதலில் விழுவார்கள். காதலுக்கு சாதி மதம் மட்டுமல்ல
ஏழை பணக்காரன் என்ற பாகுபாடும் தெரியாது. அப்படி ஒரு எமோஷலான காதல் கதை தான்.
மழையில் நனைகிறேன்.
மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லவிருக்கும் ரெபா மோனிகா ஜானும், மேற்படிப்பையே முடிக்காமல் நண்பருடன் ஊர் சுற்றும் அன்சன் பாலும் மோதலில் ஆரம்பித்து பின் காதலில் விழுகிறார்கள்.
உண்மைக்கு நெருக்கமான கதையை உணர்வுபூர்வமாக இயக்கியிருக்கிறார் சுரேஷ்குமார்.
நாயகனின் பெற்றோராக நடித்திருக்கும் மேத்யூ மற்றும் அனுபமா குமார் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இளம் ஜோடிகளாக அன்சன் பால், ரெபா அழகான காதல் ஜோடி.
காதலர்களின் கெமிஸ்ட்ரி திரையில் அற்புதம்.
காதல் படங்களில் அனேக தமிழ் ஹீரோக்கள் வேலை வெட்டி இல்லாமல் நண்பருடன் ஊர் சுற்றிக்கொண்டும் நாயகி மெத்த படித்த பெண்ணாக காட்டினால் தான் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என தமிழ் இயக்குனர்கள் சபதம் எடுத்திருக்கிறார்களோ? என்னவோ இது காலம் காலமாக தொடர்கிறது.
காதல் படம் என்றாலே நாயகனும் நாயகியும் இரு வேறு மதத்தையோ சாதியையோ சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத சட்டம் போலும்.
இடைவேளைக்கு சற்று முன்னர் நாயகனும் நாயகியும் பைக் விபத்தில் சிக்குகிறார்கள். இடைவெளிக்குப் பிறகு இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நாயகி மயக்க நிலையில் இருக்க,
எண்ண ஓட்டம் திரைக்காட்சிகளாக விரிகிறது.
எதிர்பாராத திருப்பங்களுடன்
கிளைமாக்ஸ் அமைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
காதலை மையமாகக் கொண்ட படங்களில் பாடல்கள் முக்கியத்துவம் பெறும்.
அது இதில் மிஸ்ஸிங்.
பின்னணி இசை ரசிக்கும் படி உள்ளது திரைக்கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருந்தால் காதல் காவியமாகக் கொண்டாடிருக்கலாம்.
மழையில் நனைந்து ரசிக்கலாம்.
ஆனால் தூறலில்..!