தமிழ் சினிமாவில் ஆளுமையாக இருந்த எம்.ஜி.ஆரு ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் மேலாடை இல்லாமல் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் நடித்த தனது 100-வது படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை உயர்த்தி பிடிக்கும் வகையில் அமைந்த ஒரு பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அந்த சமூகத்தினர் எம்.ஜி.ஆரை கடவுள் போல் இன்றும் பார்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் எம்.ஜி.ஆர். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தி என்று சொல்லலாம். அதேபோல் படகோட்டி படத்தில் மீனவ சமுதாய மக்களையும், ரிக்ஷாக்காரன் படத்தில் தொழிலார் சமுதாயத்தையும் பெருமைப்படுத்திய எம்.ஜி.ஆர் தனது ஒளிவிளக்கு படத்தில் ஒரு முக்கிய சமூகத்தை பற்றிய பாடலில் நடித்திருப்பார்.
1968-ம் ஆண்டு ஜெமினி பிச்சர்ஸ் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் வெளியான படம் ஒளிவிளக்கு. எம்.ஜி.ஆரின் 100-வது படம் என்ற அடையாளத்துடன் வெளியான இந்த படத்தை சானக்யா இயக்கியிருந்த நிலையில், ஜெயலலிதா, சவுகார் ஜானகி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்திற்கு, கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் வரும் நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஊசி பாசி விற்கும் சமூகவத்தை சேர்ந்த மக்களை பெருமைப்படுத்தும் வகையில் அமைந்த இந்த பாடலில், நாங்கள் முன்னேறிகாட்டுவோம் என்று சொல்லும் வகையில் எதிர்கால சிந்தனையுடன், பாடலில் சிக்கனமாக சீர்திருத்த முறைப்படி திருமணம், குடும்பக்கட்டுப்பாடு உள்ளிடட பல சமூக கருத்துக்களை வைத்திருப்பார் வாலி.
குறிப்பாக இந்த பாடல் தான் எம்.ஜி.ஆர் தனது திரை வாழ்க்கையில், மேலாடை இல்லாமல் நடித்த ஒரே பாடல் காட்சி இதுதான். அதற்கு பதிலாக இந்த பாடல் முழுவதும் அவர் உடலில் பாசி மணி அணிந்திருப்பார். இந்த பாடலை இப்போது கேட்டுகும்போதும் எனர்ஜி குறையாமல் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டடிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.