தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் புகழ் பெற்ற நடிகர் தான் MGR. இன்றைய நடிகர்கள் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் MGR. குடும்ப வறுமையின் காரணமாக நாடக குழுவில் சேர்ந்து பின்னர் துணை கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் நடிகராக ஆனவர் MGR.
1950 60களில் MGR புகழின் உச்சத்தில் இருந்தார். சிவாஜி கணேசன் MGR ஜெமினி கணேசன் ஆகிய மூவரும் அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். சிவாஜி கணேசன் படங்கள் குடும்பம் சமுதாயம் சார்ந்திருக்கும். ஜெமினி கணேசன் படங்கள் காதல் திரைப்படங்களாக இருக்கும். MGRரின் படங்கள் அதிரடி காட்சிகள் நிறைந்ததாக ஆக்சன் படங்களாக இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் MGR அவர்களின் படங்களில் சமூக நீதி கருத்துக்களும் திராவிட சிந்தனைகளும் அதிகமாக இருக்கும். MGR நடித்த படங்கள் பெரும்பாலானவை ஹிட் படங்கள் தான். அதனால் சினிமா வட்டாரங்களில் அவருக்கென்று தனி மரியாதை இருந்தது. எந்த படம் எடுக்க வேண்டுமானாலும் இயக்குனர் தயாரிப்பாளர்கள் என அனைவரும் அவரிடம் கருத்து கேட்டு தான் முடிவு செய்வார்கள். ஏன் பாடலாசிரியர்கள் கூட ஒரு பாடல் எழுதி முடித்த பின்பு அதை MGR இடம் காட்டிவிட்டு தான் ரெக்கார்டிங் கொண்டு செல்வார்கள்.
அதன்படி ஒவ்வொரு படத்திலும் MGRக்கு அதிகமாக பாடல் எழுதியவர்கள் கவியரசு கண்ணதாசன் மற்றும் கவிஞர் வாலி அவர்கள் தான்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களும் MGR க்கு ஒரு சில பாடல்கள் எழுதியுள்ளார். ஆனால் பாடல் எழுதிய உடனே MGR ஐ கண்டு அவரிடம் காண்பித்து சம்மதம் வாங்குவது அவருக்கு பிடிக்கவில்லை. அதில் அவர் உடன்பாடு இல்லாமல் இருந்தார். அதனால் MGR பாடல்கள் என்றாலே பெரும்பாலானவைகளை தவிர்த்து விடுவாராம் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
ஒருமுறை ஒரு MGR படத்தின் பாடலுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை எழுத சொன்னார்களாம். ஆனால் பாடல் எழுதிவிட்டு எம்ஜிஆரிடம் காட்ட வேண்டுமே என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் எழுதவில்லை என்று கூறிவிட்டாராம். ஆனால் எம்ஜிஆர் நேரிலே வந்து அவரை எழுதும்படி கூறியிருக்கிறார்.
உடனே ஆஹா இது தான் சான்ஸ் என்று நினைத்துக் கொண்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடலின் மூலமாகவே எம்ஜிஆரை திட்டி எழுதி இருக்கிறார். அந்த பாடல் தான் சின்ன பயலே சின்னப்பயலே சேதி கேளடா என்ற பாடல்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நம்மளை திட்டி தான் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர், சாதுர்யமாக சூட்டிங் சமயத்தில் ஒரு சிறிய குழந்தையை கையில் எடுத்து வைத்துக்கொண்டு சின்னப் பையலே சின்ன பயலே பாடலை ஷூட்டிங் முடித்தாராம். எம்ஜிஆர் அவர்களின் சாதூரியத்தை கண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் அவர்களே வாயடைத்து போய்விட்டாராம்.