Breaking News :

Thursday, January 02
.

"முரா" படத்தின் டிரெய்லர்!


"கப்பேலா" படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லர் டிராமாவாக உருவாகியிருக்கும்  "முரா" படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ரகசியமாக பாதுகாக்கப்படும் கருப்பு பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் இளைஞர் குழு, கேங்ஸ்டர், போலீஸ் என பரபரக்கும் சம்பவங்களை  சொல்லும் இப்படம், திருவனந்தபுரத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையாக வைத்து, திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஹிருது ஹாரூன், சுராஜ் வெஞ்சரமூடு, கனி குஸ்ருதி மற்றும் மாலா பார்வதி உள்ளிட்ட புதிய இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

https://youtu.be/btEgr48QE2I

படத்தின் மையத்தையும் கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்தும் இந்த டிரெய்லர், கேங்ஸ்டர் ஜானரில் ஒரு புதுமையான திரை அனுபவத்தை தரும் என்பதை உறுதி செய்கிறது.

கேன்ஸ் விருது பெற்ற "ஆல் வி இமேஜின் அஸ் லைட்", அமேசான் வெப் சீரிஸ் "க்ராஷ் கோர்ஸ்", ஹிந்தி திரைப்படம் "மும்பைகார்" மற்றும் தமிழ் திரைப்படமான தக்ஸ் திரைப்படங்களில் நடித்த  ஆகியவற்றில் நடித்ததற்காக அறியப்பட்ட ஹிருது ஹாரூன் இப்படம் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார். "ஜன கண மன" மற்றும் "டிரைவிங் லைசென்ஸ்" படப்புகழ்  நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு மிக மிக முக்கியமான திருப்புமுனைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாறுப்பட்ட திரை அனுபவம் தரும் முரா திரைப்படம் நவம்பர் 8, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

நடிப்பு : ஹிருது ஹாரூன், சுராஜ் வெஞ்சாரமூடு, மாலா பார்வதி, கனி குஸ்ருதி, கண்ணன் நாயர், ஜோபின் தாஸ், அனுஜித் கண்ணன், யேது கிருஷ்ணா, பி.எல் தேனப்பன், விக்னேஷ்வர் சுரேஷ், கிரிஷ் ஹாசன், சிபி ஜோசப், ஆல்பிரட் ஜோஷெ.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.