சிட்டிசன் படத்தில் சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த நக்மாவுக்கு, கம்பீரமான குரல் தேவைப்பட்டதால் அனுராதாவின் குரல் தேர்வு செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவில் நடிகை நக்மாவை தெரியாத ரசிகர்களே இருக்க முடியாது. அஜித்தை பிடிக்கும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக நக்மாவைப் பற்றி தெரிந்திருக்கும். ஏனென்றால், அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் சரோஜினி ஹரிச்சந்திரனாக சிபிஐ அதிகாரியாக நக்மா நடித்திருப்பார். இந்தப் படத்தில் ஒவ்வொருத்தரையாக கடத்தும் அஜித்தை கண்டுபிடிக்கும் வேலையில் தீவிரமாக இருந்து கடைசியில் அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்வார். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம்.
1990 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நக்மா காதலன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குறைவான படங்களில் தமிழில் நடித்திருந்தாலும் ஒவ்வொரு படமும் அவருக்கு ஹிட் படமாகவே அமைந்தது. காதலன், பாட்ஷா, மேட்டுக்குடி, பிஸ்தா, வேட்டிய மடிச்சு கட்டு, சிட்டிசன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றன.
தயாரிப்பாளர் என்பது தான். அதாவது, 2ஆவது தந்தை. நக்மாவின் இயற்பெயர் நந்திதா மொரார்ஜி. இவரது தந்தை அரவிந்த் மொரார்ஜி. இவர், குஜராத்தில் பெரிய தொழிலதிபர். ஷாமா காஸி என்கிற இஸ்லாமியப் பெண்ணான நக்மாவின் அம்மா அவர் மீது காதல் கொண்டு ஸீமா என்கிற ஹிந்துவாக மாறி அவரை திருமணம் செய்து கொண்டார். நக்மா பிறந்த பிறகு இருவரும் தனித்தனியாக பிரிந்தனர். பின் ஸீமா சந்தர் சதானாவை மணந்தார். அதன் பிறகு இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தது. ஜோதிகா (கணவர் நடிகர் சூர்யா), ரோஷினி (ராதிகா), ஒரு மகன் சூரஜ் சதானா.
2ஆவது தந்தை தயாரிப்பாளர் என்பதால் அவர் மூலமாக சினிமாவில் காலூன்றி நக்மாவிற்கு முதல் படமே சல்மான் கானுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி அவர் நடித்த முதல் படம் தான் பாகி. (Baagi). இந்தப் படம் மாஸ் ஹிட் கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம், இளையராஜாவின் 'ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா' பாடலும், 'கேளடி கண்மணி பாடகன் சங்கதி' பாடலும் தான். ஏனென்றால், இந்த 2 பாடலையும் அப்படியே தூக்கி வச்சிட்டாங்க…பார்த்தவுடனேயே காதல் வயப்படும் ஹீரோ, ஹீரோயினை காதலிப்பார். அதன் பிறகு இருவரும் தனித்தனியாக செல்வார்கள். கடைசியில் பார்க்க கூடாத இடத்தில் பார்த்து, அங்கிருந்து மீட்டு வருவதும், வில்லன்கள் துரத்துவதும் தான் கதை.
அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் அறிமுகம். தமிழில் மன்னன் படமானது தெலுங்கில் கரணமொகுடு என்ற டைட்டிலில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்தப் படத்தை மலையாளத்தில் டப் செய்து ஏய் ஹீரோ என்று வெளியிட்ட விநியோகஸ்தர் கோடீஸ்வரன் ஆகிவிட்டார்.
நாகர்ஜூனா, சிரஞ்சீவியோடு போட்ட ஆட்டம் பந்தாது என்று அவரை தமிழில் பிரபுதேவா, சத்யராஜ், கார்த்திக் ஆகியோரோடு ஆட்டம் போட வைத்து நக்மாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
நக்மாவும் அதற்கேற்ப கொள்ளை அழகு. காதலன் படத்தில் அவர் நடித்த ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் ரசித்தார்கள். படமோ சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்து என்ன பாட்ஷா தான். சொல்லவா, வேணும், ஸ்டைலு ஸ்டைலு பாட்டுக்கு தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழித்தது. பாடலும் சரி, பாட்டு வரிகளும் சரி, பக்காவா நக்மாவுக்கு என்றே எழுதியது போன்று இருந்தது.
நக்மா தான் வேணுமுன்னு அடம் பிடித்த சுந்தர் சிக்கு பிஸ்தா படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தனர். அதன் பிறகு சுந்தர் சிக்கு, நக்மா மேல் இருந்த அன்பு குறையவில்லை. மேட்டுக்குடி, ஜானகிராமன் படங்களுக்கு தன்னுடன் படம் முழுவதும் கூடவே பயணிக்க செய்தார்.
எல்லா நடிகர்களைப் போன்று நக்மா உடன் நடிக்க வேண்டும் என்று சரத்குமாருக்கும் ஒரு கனவு இருந்தது. 1995 ஆம் ஆண்டு அந்த கனவும் நனவானது. அதுதான் ரகசிய போலிஸ். ஆனால், நக்மா போட்ட கண்டிஷனை ஏற்றுக் கொள்ளாத நிலையில் சரத்குமாருக்கு இருந்த கடன்களை பார்த்து நக்மாவே விலகினார்.
அதன் பிறகு தான் நக்மாவின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்தது. நாகர்ஜூனாவோடு நடித்த கில்லர் மற்றும் கிரிமினல் படங்களில் தோல்வியால் நக்மாவின் மார்க்கெட் சரிந்தது. வேறு வழியில்லாமல் அரவிந்தன் மற்றும் வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தின் தோல்விக்கு பிறகு அஜித் நடித்த தீனா படத்திலுள்ள வத்திக்குச்சி பத்திக்காதுடா என்ற குத்துப் பாடலுக்கு டான்ஸ் ஆடினார். அதற்கு காரணம் சிட்டிசன் படம் தான்.
சிட்டிசன் படத்தில் நக்மாவுக்கு சிபிஐ ஆபிசர் ரோல். இதற்கு முன் நக்மா நடித்த படங்களுக்கு அவருக்கு குரல் கொடுத்தவர் நடிகை சரிதா. ஆனால், சிட்டிசன் படத்திற்கு 40 வயது மதிக்கத்தக்க சிபிஐ ஆபிஷரின் குரல் தேவைப்பட்ட நிலையில் ஒரு கவர்ச்சி நடிகையின் குரலை தேர்வு செய்தார்கள். என்னதான் கம்பீரமான குரலாக இருந்தாலும், படம் ரிலீஸான பிறகு தான் என்ன தப்பு பண்ணிட்டோம் என்று படக்குழுவினருக்கு தெரிந்தது.
ஏனென்றால், நக்மாவின் குரல் ஆண் குரல் போன்று இருந்ததாக விமர்சனம் எழுந்தது. அவர் மீது இருந்த காதல், இமேஜ் எல்லாமே அதோடு காலியானது. பின்னர் மூட்டை முடிச்செல்லாம் கட்டிக் கொண்டு மும்பைக்கு சென்றார். தமிழ்நாட்டில் நக்மாவை குரலை காலி செய்தது வேறுயாருமில்லை அவர் தான் நடிகை அனுராதா.