Breaking News :

Thursday, November 21
.

நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா”


நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” 

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான  “தசரா”  படத்தின் பாடல் படப்பிடிப்பு  கோதாவரிக்கானியில் நடைபெற்று வருகிறது ! 

நேச்சுரல் ஸ்டார் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான  படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் கதை சொல்லலில் தனித்துவமானவையாக இருந்தன. அந்த வகையில் எல்லாவற்றையும் தாண்டும் நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் நானியின் முதல் பான் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது. இப்படம்   மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிக்கானி (தெலுங்கானா) பகுதியில் நடைபெற்று வருகிறது, அங்கு நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருகிறது. RRR படத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் அமைத்து, தேசத்தையே வியப்பில் ஆழ்த்திய பிரேம் ரக்‌ஷித் மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். அதிகமான வெயில் கொளுத்தும் சூழல் இருந்தபோதிலும், இப்பாடலுக்காக படக்குழு கடினமாக உழைத்துள்ளது. இப்பாடல் படப்பிடிப்பில் 500 நடனக் கலைஞர்கள் பங்கேற்க, பிரம்மாண்டமாக இந்தப் பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியான ‘தசரா’  படத்தின் ‘ஸ்பார்க் ஆஃப் தசரா’ காட்சித்துணுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றது மற்றும் அதில்  நானியின் மாஸ் கெட்அப் மற்றும் மூர்க்கமான அவதாரம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

நடிகர் நானி மாஸ் மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், ஒரு அழுத்தமான  டிராமா திரைப்படமாக உருவாகிறது. கோதாவரிகனியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் கதையாக  அமைக்கப்பட்டுள்ளது.

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

நடிகர்கள் : நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு: 

இயக்கம் - ஸ்ரீகாந்த் ஒதெலா
தயாரிப்பு -  சுதாகர் செருக்குரி
தயாரிப்பு நிறுவனம் - ஸ்ரீ லக்‌ஷ்மி  வெங்கடேஸ்வரா சினிமாஸ்
ஒளிப்பதிவு -  சத்யன் சூரியன் ISC 
இசை - சந்தோஷ் நாராயணன் 
எடிட்டர் - நவின் நூலி 
தயாரிப்பு வடிவமைப்பாளர் - அவினாஷ் கொல்லா 
நிர்வாகத் தயாரிப்பாளர் - விஜய் சாகந்தி 
மக்கள் தொடர்பு -  சதீஷ் குமார் (AIM) - தமிழ் - வம்சி-சேகர் - தெலுங்கு

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.