நடிகை நயன்தாராவின் அன்னப்பூரணி படத்தில் இடம்பெற்ற வசனம் சர்ச்சை ஆனதை தொடர்ந்து நெட்பிலிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
ராமர் அசைவம் சாப்பிட்டதாக வரும் வசனம் தான் சர்ச்சைக்கு காரணம். இந்நிலையில் 'ஜெய் ஸ்ரீராம்' என குறிப்பிட்டு நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
உத்வேகம் அளிக்கும் வகையில், பாசிட்டிவ் மெசேஜ் உடன் தான் படம் உருவாக்கப்பட்டது, யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. நானும் கடவுள் நம்பிக்கை கொண்டவர் தான், நாடு முழுவதும் இருக்கும் கோவில்களுக்கு அடிக்கடி செல்கிறேன். இதை வேண்டுமென்றே செய்யவில்லை.
மனம் புண்பட்டிருப்பவர்களுக்கு நான் மன்னிப்பு கோருகிறேன் என நயன்தாரா கூறி இருக்கிறார்.