ஒரு கட்டத்தில் தனி ஹீரோவாக நடிக்க தொடங்கிய அவர், பைரவி படத்தின் மூலம் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார்.
தமிழ் சினிமாசில் பல வெற்றிப்படங்களை கொடுத்த ரஜினிகாந்த் இடையில் சில சறுக்கல்களை சந்தித்திருந்தாலும், அவர் தனக்கு பிடிக்காமல் நடித்த ஒரு படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து ஒரு சில மொழிகளில் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
1975-ம் ஆண்டு வெளியான கே.பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக ரஜினிகாந்த், தொடர்ந்து பல படங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் தனி ஹீரோவாக நடிக்க தொடங்கிய அவர், பைரவி படத்தின் மூலம் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார். இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்த ரஜினிகாந்த் வெற்றிகளை குவித்தார்.
அந்த வகையில் அவர் நடித்திருந்த ஒரு படம் தான் தம்பிக்கு எந்த ஊரு. ரஜினிகாந்துடன், சுலோக்ஷனா, மாதவி, சத்யராஜ், வினு சக்ரவர்த்தி, ஸ்ரீகாந்த், செந்தாமரை உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார். பஞ்சு அருணாச்சலம் கதை எழுத, ராஜசேகர் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் கதையை கேட்ட ரஜினிகாந்த் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில், சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படம் தனக்கு செட் ஆகாது என்று யோசித்துள்ளார்.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலத்திடம் பேசியபோது, ஏன் என்னாச்சு என்று அவர், கேட்க, இது எனக்கான படமாக தெரியவில்லை. மாட்டு சாணி வாறுகிறேன். மாட்டு வாலை தூக்கி டைம் பார்க்கிறேன். படத்தின் நாயகி மாதவி இருக்கிறார் லவ் படம் என்று சொன்னீங்க. ஆனால் ஒன்றுமே இல்லை என்று சொல்ல, எல்லா ஹீரோவுக்கும் 3 சண்டை வைக்கிறோம். நீ ஆக்ஷன் ஹீரோ என்பதால் 5 சண்டை வைக்கிறோம். இப்போவே 5 சண்டை என்றால், இன்னும் 10 வருடத்திற்கு பிறகு எத்தனை சண்டை வரும்?
14 ரீல் இருந்தால் 14 சண்டை போடுவியா? அதனால் நீ காமெடி பண்ணு, அதான் தில்லு முல்லு படம் எல்லாம் பண்ணீயே என்று சொல்ல, அது இந்தியில் ஹிட்டான படம். கே.பி.சாருக்காக பண்ணது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்த படம் ஓடவில்லை என்றால் யாருக்கு பிரச்சனை என்று பஞ்சு கேட்க, உங்களுக்குதான் என்று கூறியுள்ளார். நஷ்டத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீ நடி இந்த படம் ஓடும்.
இந்த படத்திற்கு பிறகு உனது கடைசி படம் என்று ஒன்று இருக்குமே அதுவரைக்கும் நீ காமெடி பண்ணாமல் இருக்க முடியாது என்று கூறியுள்ளார். அதன்படி அந்த படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.