சென்னை மாவட்ட ஆட்சியராக விஜயராணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். இவருக்கும் காங்கிரஸ் எம்பிக்கும் மோதல் போக்கு நிலவியதாக தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் சில பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காக தமிழக காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் அண்மையில் விஜயராணி ஐஏஎஸ்-ஐ சந்தித்ததாக தகவல் வெளியானது.
அப்போது எம்.பி. தனது அடையாள அட்டையை காண்பித்தும், அவரை நிற்க வைத்து மரியாதைக்குறைவாக சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு சென்னை மாவட்ட ஆட்சியராக அமிர்தஜோதியை நியமித்து தலைமைச்செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அமிர்தஜோதி உணவு மற்றும் நுகர்வோற் பாதுகாப்பு இணைச்செயலாளராக இருந்துவருவது குறிப்பிடதக்கது.