ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியவர் கோகுல். இவர் இப்போது இயக்கும் படம், ‘சிங்கப்பூர் சலூன்’. ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கிறார். ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
எல்கேஜி (2019) மற்றும் மூக்குத்தி அம்மன் (2020) படங்களுக்குப் பிறகு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மூலம் ஆர்ஜே பாலாஜியின் மூன்றாவது படம் சிங்கப்பூர் சலூன் . இப்படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், மீனாட்சி சவுத்ரி, கிஷேன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதைப் பற்றி ஆர்.ஜே பாலாஜி பேசியது, " இந்த படம் எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இந்த படத்தில் மக்களுக்கு தேவையான கமர்சியல் எலிமெண்ட் எல்லாம் கலந்து இருக்கும். லோகேஷ் கனகராஜ் , ஜீவா கேமெியோ ரோலில் நடித்திருகாங்க. இது மட்டும் இல்லாமல், ஒரு பெரிய சர்ப்ரைஸ் ,ஒரு பெரிய நடிகர் இந்த திரைப்படத்தில் நடிச்சிருக்காரு. அதை யாரென்று இப்ப ரீவில் பண்ண முடியாது, படத்தை பார்த்து நீங்களே பயங்கர சர்ப்ரைஸ் ஆகுவீங்க. ஆரம்பத்துல இந்த திரைப்படத்தை உள்வாங்க எனக்கு கடினமா இருந்தது அப்புறம் போக போக நான் பழகிக்கிட்டேன். என் ஆரம்பத்துல நான் வந்து கத்துக்கிட்ட பல விஷயங்கள் இப்போ வரைக்கும் எனக்கு உதவிகரமா இருக்கு. சமூக கருத்துகளை மேலோட்டமா சொல்லி இருக்கோம் அரசியல் பேசாத இந்த படம் , மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்" என்று கூறினார்.
இயக்குனர் கோகுல் பேசுகையில், "இந்த திரைப்படம் 60% காமெடி மீதி 40% எமோஷன், சென்டிமென்ட் என்ற பல பரிமாணங்கள் உள்ளடக்கி இருக்கு. நம்ம எப்படி ஒரு சாதாரண சலூன் கடைக்கு போயிட்டு முடி எல்லாம் வெட்டுனதுக்கு அப்புறமா நம்மள பார்க்கும்போது ஒரு திருப்தி, ஒரு சந்தோஷம் வர மாதிரி இந்த திரைப்படத்தை பார்த்து முடிச்சதுக்கு அப்புறமா உங்க எல்லாருக்கும் நிச்சயமாக தோன்றும். என்னுடைய நகைச்சுவை இந்த படத்துல இருக்கு அது இல்லாம , வித்தியாசமாகவும் முயற்சி செஞ்சிருக்கோம். நான் என்னோட வாழ்க்கையில பார்த்த நிறைய முடி திருத்துபவர்கள் தான் இந்த கதைக்கான ஒரு இன்ஸ்பிரேஷன். இன்னிக்கு இருக்கக்கூடிய எல்லா பெரிய நடிகர்களும் அவங்களுடைய அப்பாயிண்ட்மெண்ட்காக தான் வந்து காத்துக்கிட்டு இருக்காங்க, அந்த அளவுக்கு இன்னைக்கு இந்த தொழில் வந்து ஒரு மிகப்பெரிய ஒரு இடத்தை போய் அடைஞ்சிருக்கு. இந்த உள் கருத்த மையமா வச்சு, இதிலேயே நிறைய விஷயங்களை நாங்க இந்த திரைப்படத்தில் பேசி இருக்கோம். கண்டிப்பா உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.
தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கணேஷ் பேசுகையில், " சிங்கப்பூர் சலூன் இதுவரைக்கும் நான் தயாரித்த திரைப்படங்களை விட அதிக பொருட்செலவுல தயாராகி இருக்கும் திரைப்படம். ஆர். ஜே. பாலாஜியால இப்படியும் நடிக்க முடியுமா அப்படின்னு மக்கள் வியக்குற மாதிரியான ஒரு கதை அம்சமும் ,அவரும் அதுக்கு ஏத்த மாதிரி நடித்திருக்கிறார், எனக்கு இந்த கதை மேல பெரிய நம்பிக்கை இருக்கிறது. ஃபர்ஸ்ட் ஆஃப் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து மகிழ வைக்கும் கதையாகவும், செகண்ட் ஹாஃப் எமோஷன் மோட்டிவேஷன் இந்த மாதிரி பல சுவாரசியம்சங்களை இந்த திரைப்படம் உள்ளடக்கி இருக்கும்.
சிங்கப்பூர் சலூன் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.