வைதேகி காத்திருந்தாள் என்ற புகழ் பெற்ற திரைப்படத்தில் காத்திருந்து காத்திருந்து காலமும் போனதடி என்று பாடி, காலம் போன போக்கிலே கரைந்துபோன அற்புதக் குரலோன்.
அவர் பாடிய அந்த பாடல் என்னை சிறுவயதில் மிகவும் கவர்ந்தது. அதேபோல தமிழ், மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மக்களை மகிழ்வித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார்.
1973ஆம் ஆண்டு வெளியான 'அலைகள்' படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் 'பொன்னென்ன பூவென்ன' என்ற பாடலைப் பாடியதன் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார்.
50 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த பி. ஜெயச்சந்திரனின் இசைப் பயணத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய சினிமாவிற்கு வழங்கியுள்ளார். திரைப்படப் பாடல்கள், இலகு இசை மற்றும் பக்திப் பாடல்கள் என பல்வேறு வகைகளில் அவரது இனிமையான குரல் எதிரொலித்தது.
பல தலைமுறை இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தனது வாழ்நாள் முழுவதும், தென்னிந்திய இசைத் துறையில் ஜெயச்சந்திரன் பெரிய ஜம்பவானாக போற்றப்பட்டார்.
அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், சொந்தங்களுக்கும், திரை உலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.