Breaking News :

Thursday, December 26
.

சோனி லிவ் வழங்கும் ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’!


சோனி லிவ் வழங்கும்  ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தில் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று தருணத்தை மறு உருவாக்கம் செய்திருப்பது பற்றிய பல சுவாரஸ்யமானத் தகவல்களை படத்தின் இயக்குநர் நிகில் அத்வானி பகிர்ந்து கொள்கிறார். இந்தியாவின் சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வைசிராயின் மாளிகையான ராஷ்டிரபதி பவன் போன்ற முக்கியமான இடங்களை திரையில் கொண்டு வருவது மிக முக்கியமான சவால். இந்திய மக்களின் ஆடைகள் முதல் துல்லியமான செட் வடிவமைப்புகள் வரை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் உணர்வைத் தூண்டும் வகையில் படத்தில் பல விஷயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

"பொதுவாக, எந்தவொரு படத்திற்கும் குறைந்தது 16 வாரங்கள் முன் தயாரிப்பு தேவைப்படும். ஆனால், ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்திற்கு எங்கள் குழுவுக்கு ஒரு வருட முன்தயாரிப்பு காலம் தேவைப்பட்டது. ராஷ்டிரபதி பவன் இல்லாமல் சுதந்திரத்தின் கதையை சொல்ல முடியாது. உண்மையான ராஷ்டிரபதி பவனில் படப்பிடிப்பிற்கு எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே, அந்த இடத்தின் துல்லியத்தன்மையை திரையில் கொண்டு வர ஆன் லொகேஷன் படப்பிடிப்புகள் மட்டுமல்லாது கூடுதலாக 86 செட்களை உருவாக்கினோம். இந்தக் கதை அந்தக் காலகட்டத்தில் நடந்தது என்பதை நாங்கள் காட்டவும் பார்வையாளர்களை 1900 காலக்கட்டத்திற்கு கொண்டு செல்லவும் நடிகர்கள் மற்றும் செட் அலங்காரம் உள்ளிட்டவை கவனமாக பரிசீலிக்கப்பட்டது" என்கிறார் நிகில் அத்வானி.

ஸ்டுடியோநெக்ஸ்ட் உடன் இணைந்து எம்மே என்டர்டெயின்மென்ட் (மோனிஷா அத்வானி & மது போஜ்வானி) தயாரித்துள்ள ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ திரைப்படத்தை நிகில் அத்வானி இயக்கியுள்ளார். அபிநந்தன் குப்தா, அத்விடியா கரேங் தாஸ், குந்தீப் கவுர், திவ்யா நிதி சர்மா, ரேவந்தா சாராபாய் மற்றும் ஈதன் டெய்லர் உள்ளிட்டோர் இதன் திரைக்கதையை எழுதியுள்ளனர்.  லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாபியர் ஆகியோரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தைச் சுற்றியுள்ள கொந்தளிப்பான நிகழ்வுகளை படமாக்கியுள்ளது.

இந்த தொடரில் ஜவஹர்லால் நேருவாக சித்தாந்த் குப்தா, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக சிராக் வோரா, சர்தார் வல்லபாய் படேலாக ராஜேந்திர சாவ்லா, முகமது அலி ஜின்னாவாக ஆரிப் ஜக்காரியா, பாத்திமா ஜின்னாவாக இரா துபே, சரோஜினி நாயுடுவாக மலிஷ்கா மெண்டோன்சா, லியாகத் அலி கானாக ராஜேஷ் குமார், வி.பி.மேனனாக கே.சி.சங்கர், லூயிஸ் மவுண்ட்பேட்டன் பிரபுவாக லூக் மெக்கிப்னி,  லேடி எட்வினா மவுண்ட்பேட்டனாக கோர்டெலியா புகேஜா, ஆர்ச்சிபால்ட் வேவலாக அலிஸ்டர் ஃபின்லே, கிளெமென்ட் அட்லியாக ஆண்ட்ரூ குல்லம், சிரில் ராட்க்ளிஃப் ஆக ரிச்சர்ட் டெவர்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தை சோனி லிவ் ஓடிடி தளத்தில் மட்டும் நவம்பர் 15 அன்று காணத் தயாராகுங்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.