Breaking News :

Thursday, November 21
.

முதல் கவர்ச்சி கன்னி டி ஆர் ராஜகுமாரி!


ஒரு நடிகைக்கு தேவையான எல்லாமே அவரிடம் இருந்தது. மயக்கும் விழிகள், அபார உடலமைப்பு, வசீகரமான குரல், நடனத் திறமை என்று பல்வேறு திறமைகளை ஒருங்கே பெற்றவர்.

முதல் படம் சுமாராக போனாலும், அடுத்த படமான 'கச்ச தேவயானி' ஹிட் ஆகி, அவரது வெற்றிப்பயணம் தொடங்கியது. 1944-ல் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஹரிதாஸ்' வெளியாகி இவரை புகழின் உச்சிக்கு கொண்டு போனது. 1944-ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான இந்தப்படம், 1946 தீபாவளி வரை ஓடி மாபெரும் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்‌.கே.தியாகராஜ பாகவதருடன் நடித்த ராஜகுமாரி, கவர்ச்சியில் தாராளமாகவே நடித்திருந்தார். ஒரு மசாலா படத்துக்கு கவர்ச்சி மிக முக்கியம் என்ற இலக்கணத்தை முதலில் தொடங்கி வைத்தது அநேகமாக இந்தப் படமாகத்தான் இருக்கும். படத்தின் முதல் பாதி முழுவதும் காதல் காட்சிகள்தான்.

மிகவும் நெருக்கமான காட்சிகள் அதிகம். உடை விஷயத்திலும் சரி, நடிப்பு விஷயத்திலும் சரி டி‌.ஆர். ராஜகுமாரி மிகவும் தாராளமாக நடித்திருப்பார். அந்த காலகட்டத்தில் யாருமே நினைத்து பார்க்க முடியாத செயல் இது.
ஐந்து சூப்பர் ஸ்டார்கள் பாகவதர், பி யு சின்னப்பா,. டி ஆர் மகாலிங்கம் , எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் இணைந்து நடித்த முதல் நடிகைநடிகை இவர் தான்.

ஹரிதாஸ்,. நந்தனார், சந்திரலேகா போன்ற படங்களில் நடித்து இந்தியா அளவில் புகழ் பெற்றவர்.  எம்ஜிஆர், சிவாஜி இணைந்து நடித்த கூண்டுகிளி படத்தை தயாரித்தவர்.  பாண்டி பஜாரில் இருந்த ராஜகுமாரி திரையரங்கத்துக்கு சொந்தமானவர்.

கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்த அவர், 1999-ம் ஆண்டு மறைந்தார். இன்று ஒரு பிடி மண் வாங்குவதற்கும் கோடி ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும் சென்னையின், அதிக விலை மதிப்பு மிகுந்த டி.நகரில், முதல் பங்களா கட்டி 'கன்யாகுமரி பவனம்' என பெயரிட்டார்.  டி. நகரிலேயே முதன் முதலாக பங்களா கட்டியவர் இவர் தான்.  இவர் கடைசியாக நடித்த படம் வானம்பாடி.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.