Breaking News :

Monday, July 28
.

'சூர்யா 46 ' படத்தின் பூஜை!


சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான 'சூர்யா 46 ' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ரசிகர்களுக்கு அற்புதமான புதிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையில் களம் அமைத்து , சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், 'புரொடக்ஷன் நம்பர் 33 - #சூர்யா 46 ' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது தமிழ் - தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதை குறிக்கிறது. சூர்யா- வெங்கி அட்லூரி கூட்டணியில் தொடங்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கிலும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் சூர்யாவின் கதாபாத்திர தேர்வு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை  தொடர்ந்து படைப்பு எல்லைகளை கடந்து வருகிறது. அவரது நடிப்பில் 46 ஆவது படமான ' #சூர்யா 46' - சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் 'புரொடக்ஷன் நம்பர் 33 ' என்ற பெயரில் முழு அளவிலான இரு மொழி படமாக தயாராகிறது. மேலும் இது தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.

இயக்குநர் வெங்கி அட்லூரியின்  இயக்கத்தில் உருவான ' சார் /வாத்தி' , 'லக்கி பாஸ்கர்' ஆகிய சமீபத்திய படங்கள் தொடர்ச்சியான வெற்றியை பெற்றிருக்கிறது. தனது தனித்துவமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற வெங்கி அட்லூரி-  தற்போது சூர்யாவுடன் கரம் கோர்க்கிறார். இயல்பான படைப்பிலிருந்து மாறி, அசாதாரணமானதாக இருக்கும் என்று உறுதி அளிக்கும் வகையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகளை அவர் அதிகரிக்கிறார்.

'பிரேமலு ' படத்தின் மூலம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையான மமீதா பைஜூ கதாநாயகியாக இணைகிறார். இவருடன் ரவீனா டாண்டன் தெலுங்கு சினிமாவில் மீண்டும் மறுபிரவேசம் செய்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தேசிய விருதைப் பெற்ற  ஜீ.வி. பிரகாஷ் குமார் மீண்டும் ஒரு இசை அனுபவத்தை வழங்குவதற்காக வெங்கி அட்லூரியுடன் இணைந்திருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை நவீன் நூலி கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை பங்களான் ஏற்றுக் கொள்கிறார். இந்த திரைப்படத்தை வெற்றிகரமான திரைப்படங்கள் மற்றும் தரமான திரைப்படத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தயாரிப்பாளர்கள் எஸ். நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

2026 ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மே மாத இறுதியில் தொடங்குகிறது.

நடிகர்கள் : சூர்யா, மமீதா பைஜூ, ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார்.
தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி
தயாரிப்பாளர்கள் :  எஸ். நாக வம்சி - சாய் சௌஜன்யா
இசை : ஜீ. வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு :  நிமிஷ் ரவி
படத்தொகுப்பு : நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பு : பங்களான்
சண்டை பயிற்சி : வி. வெங்கட்
நடன இயக்குநர் : விஜய் பின்னி
நிர்வாகத் தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபாலகிருஷ்ணா
லயன் புரொடியூசர் : உமா மகேஸ்வர் ராவ்
தயாரிப்பு நிறுவனம் : சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் - ஃபார்ச்சூன் போர் சினிமாஸ்
வழங்குபவர்கள் : ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub