Breaking News :

Saturday, February 01
.

திரில்லர் திரைப்படம் தீ ஸ்டிங்கர் .


வீ.ஆர். சினி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் அருண் பிரசாத் அவர்களின் முதல் தயாரிப்பில்  விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் திரைப்படம் தீ ஸ்டிங்கர் .

P. ஹரி எழுதி இயக்கும் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், அருண் பிரசாத், ஶ்ரீனிவாசன், தீபிகா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,  பிரபல நடிகை  கதையின் நாயகியாக  நடிக்க இருக்கிறார் என படக்குழு தெரிவித்துள்ளது.

சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் வகையை சார்ந்த, மிகவும் வித்தியாசமான கதையம்சம் உள்ள இந்த திரைப்படத்தை,  தமிழ் சினிமாவில் கண்டிராத வகையில், உலக தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன் CGI மற்றும் VFX வேலைகளை பீனிக்ஸ் ஃபிலிம் மேக்கர் ஸ்டுடியோ மும்பையை சேர்ந்த அனுபவமிக்க கலைஞர்களை கொண்டு உருவாக்க பொருப்பெற்றீருக்கிறது.  

ஏலியனோடு இணைந்து மற்ற மிருகங்கள் மற்றும் கதைகளங்கள்  பார்வையாளர்களுக்கு விஷுவல் டிரீட்டாக அமையும் என இயக்குனர் P. ஹரி தெரிவித்துள்ளார்.

தொழில் நுட்பக் கலைஞர்களாக சபரி ஒளிப்பதிவும், M.S. காமேஷ் இசையும், மணிகுமரன் சங்கரா படத்தொகுப்பும்,  முஜிபூர் ரஹ்மான் கலையும், வீர் விஜய் சண்டை பயிற்சியாளராகவும் பணியாற்ற K.H. ஜெகதீஸ் தயாரிப்பு மேற்பார்வையாளராக  பணியாற்றுகிறார்.

அனிமேஷன் வேலைகள் முடிந்தனிலையில் இருக்கும் இத்திரைப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடக்க தயாராக இருக்கிறது.

THE STINGER. வளர்ந்து வரும் தொழில் நுட்ப உதவியுடன் உலக தரத்தில் உருவாகும் ஒரு மாறுபட்ட திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.