Wadjda என்ற திரைப்படம் முதல் சவுதி அரேபிய பெண் இயக்குநரால் எடுக்கப்பட்ட படம். ஆனால் இது ஒரு ஐரோப்பிய தயாரிப்பு. இயக்குநர் Haifaa Al-Mansour கெய்ரோவில் அமெரிக்கன் யுனிவர்சிடியில் இலக்கியம் பயின்றவர்.
படத்தின் இதை ரொம்பவும் சிம்பிள். 11 வயது சிறுமி பள்ளிக்கு செல்லும் போது சைக்கிளில் செல்ல ஆசைப்படுகிறாள். ஆனால் அது மறுக்கப்படுகிறது. அவளது பள்ளித்தோழன் அப்துல்லா சைக்கிளில் செல்கிறான். இவளுக்கு அவனை எப்படியாவது சைக்கிள் ரேஸில் வெல்ல வேண்டும் என ஆசை.
பள்ளியில் குரான் வாசிப்பு போட்டி நடைபெறுகிறது. இவளே வெல்கிறாள். பணமும் கிடைக்கிறது. சைக்கிள் வாங்கலாம் என்ற ஆசை அவளுக்குப் பிறக்கிறது. ஆனால் நடந்ததோ வேறு. இவளை கேட்காமலே அவளது பரிசுப் பணம் ஆப்கன் நிதிக்கு அனுப்பப்படுகிறது. மனம் வெந்து வீட்டுக்கு வருகிறாள்.
ஆச்சர்யம். அவளுக்கு வீட்டில் ஒரு அழகிய சைக்கிள் காத்திருக்கிறது. இதுதான் விஷயம் அவளது அப்பா இரண்டாவது திருமணத்திற்காக அவளது அம்மாவை தொடர்ந்து வற்புறுத்தி, இரண்டாவது திருமணமும் செய்து கொள்கிறாள். அதன் மூலம் முதல் மனைவிக்கு கிடைத்த பணத்தில் தான் இவளுக்கு சைக்கிள் கிடைக்கிறது.
மறுநாள் இவள் பள்ளித்தோழன் அப்துல்லாவோடு சைக்கிள் போட்டியில் வெல்கிறாள். ஆனால் அவளால் அப்துல்லாவைப் போல் சைக்கிளில் பள்ளி செல்லமுடியாது. இதுதான் சவுதியில் பெண்களின் நிலை.