எமோஷன், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அதிக எண்டர்டெயின்மெண்ட்டோடு ‘வெப்பன்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது என்றார் நடிகர் வசந்த் ரவி!
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, தனது இயல்பான நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் நடிகர் வசந்த் ரவி. குகன் சென்னியப்பன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம் ஜூன் 7, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
படம் குறித்து நடிகர் வசந்த் ரவி கூறும்போது, ”’வெப்பன்’ திரைப்படத்தின் விஷுவல் புரோமோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அபரிதமான வரவேற்பு எங்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. படத்தையும் பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று முழுமையாக நம்புகிறோம். எமோஷன்ஸ், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றின் கலவையாக படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை பார்வையாளர்களை நிச்சயம் இந்தப் படம் மகிழ்விக்கும். ஒரு நடிகராக நான் எப்போதும் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து எனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன். அந்த வாய்ப்பு ‘வெப்பன்’ படத்தில் நடந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. இந்த வாய்ப்புக்காக மில்லியன் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர் குகன் சென்னியப்பனுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
’வெப்பன்’ பற்றி நிறைய விஷயங்களை பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அது படம் பற்றிய ஸ்பாய்லராக மாறிவிடும். உலகளாவிய பார்வையாளர்களுக்கு இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் சாருடன் இந்தப் படத்தில் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது” என்றார்.
’வெப்பன்’ திரைப்படத்தை குகன் சென்னியப்பன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் மில்லியன் ஸ்டுடியோ படத்தைத் தயாரித்துள்ளது. சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வெப்பன்’ படத்தில் வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையது சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரேம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணா எடிட்டிங், கலை இயக்குநர் சுபேந்தர் பி.எல். மற்றும் ஆக்ஷன் சுதேஷ் கையாண்டுள்ளார்.