மகன் யுவன் சங்கர் ராஜா அமைத்த டியூனை இளையராஜா தனது படத்திற்கு பயன்படுத்தியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக பல வெற்றிப்படங்களை கொடுத்த யுவன் சங்கர் ராஜா, தான் 8 வயதாக இருக்கும்போது அமைத்த டியூனை அவரது அப்பாவும், பிரபல இசையமைப்பாளருமான இளையராஜா தனது படத்திற்காக பயன்படுததியுள்ளார்.
1976-ம் ஆண்டு பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள நிலையில், தனது இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளளார். இவர் இசையமைப்பில் உருவான பல படங்களில் இசைக்காவும் பாடல்களுக்காகவுமே வெற்றிகளை பெற்றுள்ளது.
80 மற்றும் 90- காலக்கட்டங்கள் தொடங்கி தற்போதுவரை இசை இளையராஜா என்று இருந்தாலே படம் வியாபாராம் ஆகிவிடும் என்ற நிலை இன்றும் இருக்கிறது. அதேபோல் இளையராஜாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா.
1997-ம் ஆண்டு சரத்குமார் பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாரளாக அறிமுகமானார்.
இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. அதன்பிறகு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த யுவன், தனது இசையில் பல ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார். குறிப்பாக சிம்பு, கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ள யுவன் சமீபத்தில் வெளியான விஜயின் கோட் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் சுமாரான வரவேற்பை பெற்றது.
1979-ம் ஆண்டு பிறந்த யுவன் சங்கர் ராஜா, 1997-ல் தனது 19 வயதில் இசையமைப்பாளராக அறிமுகமாகியள்ளார். ஆனால் அதற்கு முன்பே அவர் தனது 8 வயதில் போட்ட ஒரு டியூனை இளையராஜா தனது படத்திற்காக பயன்படுத்தியுள்ளார்.
1987-ம் ஆண்டு பிரபு நடிப்பில் சிவாஜி புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த ஆனந்த் என்ற படத்தில் வரும் பூவுக்கு பூவாலே மஞ்சம் உண்டு என்ற பாடலுக்கு டியூன் அமைத்தவர் யுவன் சங்கர் ராஜாதான் என்பதை இளையராஜாவே ஒரு மேடையில் கூறியுள்ளார்.