தேவையானவை:
குழம்பு மசாலா பொடி-2 டேபிள் ஸ்பூன், புளி-எலுமிச்சை அளவு, பெருங்காயம்-சிட்டிகை, வறுத்த மொச்சை -2 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த்துருவல்-2 கப், பரங்கிக்காய், பூசணிக்காய், அவரைக்காய், வாழைக்காய், கொத்தவரங்காய், தக்காளிக்காய், மாங்காய், (நறுக்கியது) -2 கப், பச்சை மிளகாய்-4, மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு- தேவைக்கு.
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா 2 டேபிள் ஸ்பூன், மிளகு-2. வறுத்து அரைக்க: தனியா-4 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல்-4,
தாளிக்க: எண்ணெய், வேர்க்கடலை- தலா 2 டேபிள் ஸ்பூன், வெந்தயப் பொடி (வறுத்தது) -1/2 டீஸ்பூன், மிளகு, சீரகப்பொடி - தலா 1/4 டீஸ்பூன்.
செய்முறை:
கிழங்குகளை குழையாமல் வேக வைத்து தோலுரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். புளிநீரில் குழம்பு மசாலா பொடி. உப்பு, காய்கள், ஊற வைத்த மொச்சை போட்டு வேக விடவும். வறுத்து அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை வறுத்து தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும்.
காய்கள் முக்கால் பங்கு வெந்ததும். பச்சை மிளகாய் கீறியது, வறுத்து அரைத்த விழுது, கிழங்குத் துண்டுகள் சேர்த்து கொதித் ததும் இறக்கவும். தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை தாளித்து அடுப்பை அணைத்து கறிவேப்பிலை மல்லித்தழை தூவவும்.
இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி (ganesanmatrimony.com) பார்க்கவும்