அயிரை மீன் - 500 கிராம்
+ எண்ணெய் அரை குழிக்கரண்டி
பூண்டு - 6 பல்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தனியாத் தூள் - இரண்டு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
+ சின்ன வெங்காயம் -200 கிராம்
+ தக்காளி - 200 கிராம்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
+ உப்பு - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
+ கருவேப்பிலை தேவையான அளவு
செய்முறை:
1. மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
2. புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்து மண் இல்லாத படி நன்கு கரைத்துக் கொள்ளவும்.
3. இப்போது கரைத்த புளித்தண்ணீரில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகிய இவை அனைத்தையும் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
4. இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்துத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். 💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💛💚
5. எண்ணெய் நன்கு காய்ந்த மாத்திரத்தில் கடுகு, கருவேப்பிலை ஆகிய இவற்றை அதில் போட்டு நன்கு தாளிக்கவும்.
6. தாளித்த பொருள்களுடன் சின்ன வெங்காயம், தக்காளி ஆகிய இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும். உடன் தட்டிய பூண்டை போட்டு மேலும் நன்கு வதக்கவும்.
7. இப்போது கரைத்த புளிக் கரைசல் உடன் மேற்கண்ட பொருள்களையும் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
8. மேற்கண்ட பொருள்கள் நன்கு கொதித்ததும் மீனைப் போட்டு குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும்.
9. இதோ இப்போது சுவையான மணம் மிக்க அயிரை மீன் குழம்பு தயார்.
மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது.